10 ஆம் திகதிக்குப் பின்னர் மின்வெட்டு இல்லை - ரவி


மன்னிப்பு கோருகிறார் அமைச்சர்

எதிர்வரும் 10 ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என மின்சக்தி எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். இது வரை மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டது தொடர்பில் பொது மக்களிடம் மன்னிப்பு கோருவதாக தெரிவித்த அவர், எதிர்காலத்தில் இவ்வாறான பிரச்சினைகள் எழாது எனவும் குறிப்பிட்டார்.

மட்டக்குளியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே

அவர் மேற்கண்டவாறு கூறினார்.

10 ஆம் திதிக்குப் பின்னர் மின்வெட்டு அமுல்படுத்தப்படா மாட்டாது. நாம் வேண்டுமென்றே மின்வெட்டை செயற்படுத்தவில்லை. தற்பொழுது தேவையான திட்டங்கள் உரிய முறையில் முன்னெடுக்கப்பட்டு இவ்வாறான பிரச்சினைகள் எழாமல் நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.

மின்வெட்டு நீக்கப்பட்டாலும் மக்கள் சிக்கனமாக மின்சாரத்தை பயன்படுத்த வேண்டும்.தேவையற்ற மின்சார கேள்வி எழாதவாறு கவனிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

கடந்த மார்ச் 25 ஆம் திகதி முதல் நாடுபூராவும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டது.வரட்சியுடனான காலநிலையுடன் மின்சாரத்திற்கான கேள்வி அதிகரித்துள்ள நிலையில் தினமும் 4 மணிநேர மின்வெட்டு முன்னெடுக்கப்பட்டு வருகிறது. காலையில் 3 மணிநேரம் இரவு ஒரு மணிநேரமும் மின்துண்டிக்கப்பட்டது.

ஆனால் உத்தியோகபூர்வ அறிவிப்பிற்கு முன்னரும் நாட்டின் பல பகுதிகளிலும் இடைக்கிடை முன்அறிவிப்பின்றி மின் துண்டிக்கப்பட்டது.

இது தொடர்பில் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்திருந்ததோடு விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டது தெரிந்ததே.
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here