போதைப்பொருளுடன் சட்டத்தரணி உட்பட மூவர் கைது


ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் சட்டத்தரணி ஒருவர் உட்பட மூவர் கொள்ளுப்பிட்டியில் இன்று (17) அதிகாலை  கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து அப்போதைப்பொருளையும் கைப்பற்றியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து இச்சந்தேக நபர்களைக் கைதுசெய்துள்ளதாகவும், இவர்கள் புத்தளத்தைச் சேர்ந்த 33மற்றும் 38வயதுடையவர்கள் எனவும், பொலிஸார் தெரிவித்தனர்.

அப்துல் கமீத் பஸ்லீன் (33), அப்துல் கறீம் முஹம்மட் அஸ்மி (38), முஹம்மட் இக்பால் கிருஷ்ணய் ஆய்ஸ் ஆகியோரே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சட்டத்தரணியிடமிருந்து 4.11 கிராம் ஐஸ் போதைப்பொருளையும்  ஏனைய இரு சந்தேக நபர்களிடமிருந்து 4.3 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 4 போதை மாத்திரைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here