ஒரு லீட்டர் பெற்றோல் இலங்கையில் 450 ரூபாவாகும் அபாயம் ஏற்படும்

"கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் இன்றைய உரையின் சுருக்கம்."

01.முஸ்லீம்களின் மார்க்க விடயம் பற்றி பேசும் உரிமையில் ரணிலோ, மைத்திரியோ, மஹிந்தவோ வேறு யாருமோ தலையிட்டு தீர்மானிக்க முடியாது.

02.உலகில் எந்த ஒரு நாட்டிற்கும் இல்லாத சலுகையை ஈரான் இலங்கைக்கு வழங்குகிறது 6 மாதகால கடனுக்கு எண்ணெய்யை கொடுக்கிறது.

03.இலங்கைக்கு கடன் வழங்கும் நாடுகளில் இரண்டாவது நாடு முஸ்லீம் நாடுகள்.

04.பதுளை செங்கலடி நெடுஞ்சாலைக்கு 2000 கோடி வழங்கும் நாடு சவூதி.

05.கிழக்கு பல்கலைக்கழக அபிவிருத்திக்கு 200 கோடி பணஉதவி செய்வது குவைத் அரசு.

06.ஒபேக் அமைப்பின் அறிவிப்பில் கூறியுள்ளது இலங்கை முஸ்லீம்களின் பிரச்சினை தொடர்ந்தால் எரிபொருள் எண்ணெய் வழங்களை 23 வீதமாக மாற்ற ஏற்படும் அவ்வாறு மாற்றினால் ஒரு லீட்டர் பெற்றோல் இலங்கையில் 450 ரூபாவாகும் அபாயம் ஏற்படும்.

07.ஓ.ஐ.சீ. 57 நாடுகள் மிக சக்திமிக்கது அதன் தீர்மானம் ஐக்கிய நாடுகள் தீர்மானத்தைப்போல் ஆனது.

08.ஓ.ஐ.சி.நாடுகள் கோரியுள்ளது இலங்கை முஸ்லீம் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு தவறும் பட்சத்தில் பொருளாதார தடை கூட ஏற்படலாம் என எச்சரித்துள்ளது.

09.இந்த நாட்டில் இருந்து ஒரு அங்குளம் நிலத்தை கூட நாங்கள் பிரித்து ஆள விரும்பவுமில்லை தேவையுமில்லை.

10.வரும் ஜனாதிபதி தேர்தலில் முஸ்லீம் மக்கள் ஒற்றுமையாக இருந்து தீர்மானம் மேற்கொள்ள வரும்.

11.தற்காலத்தில் தலைவர்களில் இருந்து கிராம மக்கள் வரை கட்சி பேதங்களை மறந்து ஒற்றுமையாக பயணித்து சமூகத்தை பாதுகாக்க இணைய வேண்டும்.

12.இலங்கை வரலாற்றில் 90 ஆண்டுகளுக்கு பின் முஸ்லீம்கள் இல்லாத அமைச்சரவை.

13.உங்கள் அமைச்சரவையிலோ அல்லது உங்களின் பதவிகளிலோ நாம் இருக்க வேண்டும் என்றால் முஸ்லீம் சமூகத்தின் பிரச்சினைக்கு தீர்வு வேண்டும்.

14.இந்த நாட்டில் ஒரு கிராம சேவகர் பிரிவைக் கூட நாம் தனித்து ஆழ விரும்பவில்லை.
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here