ஒன்றுமறியா  பாலகனின் கையில் ஒரு தீப்பெட்டியைக் கண்டால் நாம் எல்லாம் எப்படித் துடித்துப் போவோம். அவரச அவரசமாக அதை பறித்தெடுப்பதுதான் நாம் செய்யும் முதல் வேலை.  சில போது நமது பார்வைக்கு அகப்படாது அந்தப் பிள்ளை  தீக் குச்சியைத் தட்டி காய்ந்த  சருகுகளில் பற்ற வைத்து வேடிக்கை பார்க்கும்போதுதான் எவ்வளவு விபரீதங்கள் ஏற்பட்டு விடுகின்றன.    இது தான் இப்போது நம்மைச் சுற்றி நடப்பதாக நான் நினைக்கிறேன்.

மொழிபெயர்ப்புத் தொழிலில் ஈடுபடுவன் என்ற வகையில் பொலிஸ் நிலையங்களிலிருந்து வரும் முறைப்பாட்டுப் பிரதிகளை மொழியெர்ப்பு செய்யும் போது ஏற்படும் மனவேதனை சொல்லிப் புரிய வைக்க முடியாது.

பெரும்பான்மையான பொலிஸ்காரர்களுக்கு சிங்களத்தில் கூட நாலு வரி சரியாக எழுதத் தெரியாது.  இந்த நிலையில்தான்  இந் நாட்களில் இவர்களின் கைகளில்  இந்த நாட்டின் அவசர கால ஒழுங்குகளை மீறல்,  பயங்கரவாத தடை சட்டம் போன்ற சர்ச்சைக்குரிய சட்டங்கள் சிக்கித் திணறுகின்றன. அதன் நேரடி விளைவுகள்தான்  கற்பிட்டிப் பிரதேசத்தைச் சேர்ந்த கல்வியாளர் டில்ஷானும், 17 வயது நிறைமாதக் கர்ப்பிணி ரிநோஷா  ஹசலக   மசாஹிமாவும்,  இன்னும் எராளமான அப்பாவிகளும் புனித நோன்பு காலத்திலே சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இருந்து இரத்தக் கண்ணீர் வடிக்க வேண்டிய நிலை.

கல்வியாளர் டில்ஷான், ஹசலக மஷாஹிமா போன்றோர் பற்றி முக நூல் பக்கங்கள் நிறைப் பேசிவிட்டன.  எனவே  இளம் நிறைமாதக் கர்ப்பிணி ரிநோஷா  பற்றிப் பேசுவதுதான் இந்த ஆக்கத்தின் நோக்கம்.

16 வயதில் தாயாகப் போகும் நிலையில் இருந்த இந்த பரிதாபத்துக்குரிய இளம் பெண் தனது கணவரோடு பிரசவகால மருத்துவ பரிசோதலைனயை முடித்துக் கொண்டு தேசிய அடையாள அட்டைக்கான புகைப் படம் எடுத்துக் கொள்ளத்தான் அப்பகுதியில் உள்ள படப் பிடிப்பு நிலையத்துக்கு 16.05.2019 அன்று  சென்றிருக்கிறாள்.  புகைப்படம் எடுத்துக் கொள்ளளப் போன பெண் எப்படி முகத் திரை போட்டுக் கொண்டு அத் தேவையை நிறைவேற்றுவது என்ற நியாயத்தைக் கூட யாரும் யோசிக்கவில்லை.  குமட்டல் எடுத்தபோது  மூக்கை மூடிக் கொள்வதற்காக தனது கைக் குட்டையை உபபோகித்தபோது அந்த புகைபட நிலையக்காரன் நாட்டின சட்டத்தைப் பாதுகாக்கும் புனிதப் பணியைச் செய்யப் போய்  119 க்குத் தகவல் கொடுத்துள்ளான்.

நான் ஏற்கனவே குறிப்பிட்டது போது விபரம் தெரியாத பிள்ளை கையில் கிடைத்த தீப் பெட்டியை வைத்துக் கொண்டு தீக்குச்சியைத் தட்டித் தட்டி சருகுகளுக்கு தீயூட்டி காணுகின்ற சுகம் போலத்தான் இந்த முஸ்லிம் சமூ கத்தை பழிவாங்கத் துடிக்கும்  சிறுமைத்தனம் கொண்டவர்கள்  119 க்கு தகவல் கொடுத்து ஊதிப் பற்ற வைக்கிறார்கள்.  அதுதான்  விமாணத்தில் புனித குர்ஆனை ஓதிக் கொண்டிருந்த சகோதருக்கும் நடந்திருக்கிறது.

119 தகவலை அடுத்து அங்கு விரைந்த வந்த போலிஸ்காரன் அந்த அபலையைப் பிடித்து பாதையில் நின்று மற்றும் இரு சகாக்களை சாட்சி வைத்து  தனக்கு சரயாகத் தெரியாத ”அவசர கால விதிகளை மீறும்” சட்டத்தின் கீழ் நீதி மன்றத்துக்கு ஆஜர் செய்துள்ளான்.  அந்தச் சட்டத்தின் கீழ் கைகள் கட்டப்பட்ட ஒரு நீதிபதியால் ஒரு கைதியை தடுப்புக் காவலில் வைப்பதைத் தவிர வேறு என்னதான் செய்ய முடியும்.?  ஆயினும் அந்தக் கைதியை பிணையில் விடுவிப்பதானால் போலீஸ் மூலம் அல்லது  சட்டத்தரணி பிரதிநிதித்துவம் மூலம் சட்டமா அதிபர் அனுமதியைப் பெறவேண்டும்.

அந்தப் பெண்ணுக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று பழிவாங்கும் எண்ணங் கொண்ட பொலிசாரிடம் அதை எதிர் பார்க்கவும் முடியாது,  அவசரத்துக்கு அந்தப் பெண்ணின் குடும்பம் அணுகிய சட்டத் தரணி மூலமும் அது நடக்கவில்லை.  எனவே அவள்  தடுத்து வைக்கப்பட்டாள்.   இதன் பின்னர்தான் அவளின் குடும்பம் சட்டத்தரணி நதீஹா அப்பாஸின் உதவியை 22.5.2019 அன்று  நாடியுள்ளது.

புத்தளம்  நீதிமன்றத்தின்  பிரபல சட்டத்தரணி பாரிஸ் மரிக்கார், இளம் சட்டத்தரணி  சஜாத், தன்னார்வ தொண்டர் திருமதி ஜுவைரியா  ஆகியோரின் அனுசரனையுடன்  பாதிக்கப்பட்ட இளம் நிறைமாதக் கர்ப்பினியை பினையில் வடுவிப்பதற்கான பகீதரத் பிரயத்தனத்தை சட்டத்தரணி நதீஹா அப்பாஸ் மேற்கொண்டிருந்தார்.

ஹஸலக  மஷாஹிமா, மற்றும் கற்விட்டிப் பகுதியைச் சேர்ந்த நிறைமாதக் கர்ப்பினி ரினோஷா ஆகியோரும் அடங்குவர்  எமக்குக் கிடைக்கக் கூடியதான தகவலின் பிரகாரம் அந்த எண்ணிக்கை 60 எனத் தெரிய வருகிறது.  ஹஸலக மஷாஹிமாவுக்கு எற்கனவே ஆ‌ஜராகிய   சிரேஸ்ட்ட சட்டத்தரணி ஷரூக் அவரது பாரியார் சகிதம் அவந்தப் பெண்ணுக்குப் பிணை பெற்றுக் கொடுத்திருந்தனர்.  புத்தளம் கல்வியாளர் டில்சானுக்காக கொழுப்பு சட்டத்தரனி சுவஸ்திகா , சட்டத்தரணி,  புத்தளம் சட்டத்தரணி சஜாத் ஆகியோர் ஏற்கனவே ஆகராகி இருந்தனர்.

இந்த நிலையில்தான்  பிரபல சட்ட வல்லுனர்களான  நிஸாம் காரியப்பர்,  பாயிஸ் அமீர் போன்றோரின் உதவியைப் சட்டத்தரணி நதீஹா அப்பாஸுக்குப்  பெறக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.  தன்னார்வ அமைப்புக்களின் சமூக போராளியரான திருமதி ஜுவைரியா,  சறின் ஷக்கூர்  ஆகியோரின் முயற்சி காரணமாக விவகாரம்  மக்கள் விடுதலை முன்னணி கட்சி ஊடாக பாராளுமன்றத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டது.

இவர்களுக்குப் பிணை வழங்கவது தொடர்பான் சட்ட ஆவணங்கள் 07.06.2019 அன்று புத்தளம் மாவட்ட நீதி மன்றில் சமரப்பிக்கப்பட்டபோது மீண்டும் ஒரு தடை அங்கு ஏற்பட்டது. அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்ட சட்டப் பிரவுப் பிழை காரணமாக  மீண்டும் வழக்கு  பிற்போட வேண்டிய நிலை ஏற்பட்டது.  அந்த நிலையில் அந்த நிமைாதக் கர்ப்பினிக்கு மீண்டு  இருவார தடுப்புக் காவல் நீடிக்கும் பரிதாப நிலை ஏற்படும் வாய்ப்பே அதிகம் இருந்தது.  ஆயினும் புத்தளம் பிரதம் நீதவான்  கௌரவ  இந்திரஜித் புத்ததாஸ அவர்களின் மனிதாபிமானம் காரணமாக அந்த ஆவணத்தில் நிழந்திருந்த பி‌ழையைச் சரி செய்ய அன்று மாலை வரை அவகாசம் கோடுக்கப்பட்டபோது புத்தளம்  நீதிமன்ற  முஸ்லிம் சட்டத்தரணிகள் துரிதமாகச் செயற்பட்டு அந்த ஆவணம் அன்று மா‌லைக்கு முன்னரேயே திருத்தப்பட்டு  சட்டமா அதிபரின் நேரடி ஆணையின் பேரில் புத்தளம் பொலிஸாரால் நீதிமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்டது.

கல்வியாளர் டில்ஷான் சார்பாக சட்டத்தரணி ஸ்வஸ்திகா,  சஜாத் ஆகியோர் ஆஜராக நிறைமாதக் கர்ப்பினி ரிநோஷா சார்பாக  சார்பாக  சட்டத்தரணி நீதீஹா அப்பாஸ்.  புத்தளம் சிரேஸ்ட சட்டத்தரணி பாரிஸ் மரிக்கார், அஸ்ரக் ,அஸீம் உட்பட புத்தளம் நீதி மன்றத்தின் அனைத்து முஸ்லிம் சிரேஸ்ட சட்டத்தரணிகளும் ஆஜராகினர்.
புத்தளம் பிரதம நீதிபதி  கௌரவ  இந்திரஜித் புத்ததாஸ அவர்கள்  மிகவும் நெகிழ்வுத் தன்மையடன் செயற்பட்டதோடு இந்த விவாகரம் தொடர்பாக  பொலிஸார் நடந்து கொண்ட முறை பற்றி தனது அதிருப்பிதயை அடிக்கடை வெளியிட்டுக் கொண்டிருந்தார் என்பது இங்கு கோடிட்டுக் காட்டத் தக்களது.

இந்த நாட்களில் முஸ்லிம் அரசியல் பிரமுகமர்கள் தமது பதவிகளைத் துறந்து ஒற்றுமைப்பட்டு நிற்பது பற்றி கதையாடல்கள் இடம் பெற்று வரும் இத் தருணத்தில் இந் சட்டத் துறையினர் எந்த ஊதியத்தையும் எதிர் பாராது முழு அரப்பணிப்புடன்  60  சிறைக் கதவுகளுக்குப் பின்னால் புனித ரமழான் காலத்தில் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த 60 பேர் சுதந்திரப் பறவைகளாக வெளியே இறகு விரிக்க ஏற்பாடு செய்திருப்பது  சிலாகித்துப் பேசப்பட வேண்டிய ஒன்று.

ஒற்றுமை என்னும் கயிற்றை இந்த கைர் உம்மத்து பலமாக, மிகப் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொண்டுள்ளது. அல்ஹம்து லில்லாஹ்.

Thanks : Puttalam Today

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.