ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்புக்கள் தொடர்பாக பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் தெரிவிக்கப்படும் சாட்சியங்கள் அதிர்ச்சி மேல் அதிர்ச்சிகளை ஏற்படுத்திக் கொண்டு இருக்கின்றன..சில நாட்களுக்கு முன்பு சாட்சியமளித்த புலனாய்வுப் பிரிவுத் தலைவர் ஏப்ரல் 7ம் திகதியே இது தொடர்பாய் சர்வ வல்லமையுடைய திவயின பத்திரிகை வாசகருக்கு
(தி.ப.வா) அறிவித்ததாய் சொல்லிவிட்டுச் சென்றார்..

கடந்த வருடம் அக்டோபர் 23 ஆம் தேதியில் இருந்து தனக்கு பாதுகாப்புக்  கவுன்சிலுக்கு வரவே கூடாது என்று தி.ப.வா தடை செய்து இருந்ததாக கூறுகிறார்  கட்டாய லீவில் அனுபப்பட்ட பொலிஸ் மா அதிபர் பூஜித..என்ன கூத்து இது..பொலிஸ் மா அதிபர் இல்லாமல் உலகத்தில் எங்கே பாதுகாப்புக் கவுன்சில் மீட்டிங்  நடக்கும் ? ஏப்ரல் 21 குண்டு வெடிப்பின் பின்னர் தன்னைப் பல முறை தொடர்பு கொண்ட தி.ப.வா குண்டு வெடிப்புக்குப் பொறுப்பேற்றுக் கொண்டு பதவி விலகுமாறும் அவ்வாறு விலகினால் வெளிநாட்டுத் தூதுவர் பதவி ஒன்று கிடைக்கும் என்று சொன்னதாகவும் சொல்கிறார் பூஜித...முன்னாள் பாதுகாப்புச் செயலாளரின் புலம்பலும் இப்படித்தான் இருக்கிறது..இதை எல்லாம் உலக நாடுகள் பார்த்தால் காறித் துப்பும்..தெளிவாய்ச் சொல்வதாய் இருந்தால் இந்த பயங்கரத்தை நிறுத்தி இருக்கலாம்..அப்படி நிறுத்தாமல் விட்டதன் பின்னணி ஒரு சமூகத்தை வேட்டையாடுவதற்காகவா என்ற நியாயமான சந்தேகங்களை எழுப்புகின்றன..

பொலிஸ்மா அதிபரின் சாட்சியத்தையும் பாதுகாப்புத் தரப்பின் உயர் மட்டங்களின் சாட்சியங்களையும் பார்த்த போது முதல்வன் படம் ஞாபகத்தில் வருகிறது..மாணவர் ஒருவருக்கும் அரசாங்க பஸ் டிரைவர் ஒருவருக்கும் ஏற்படும் தகராறு ஜாதிக் கலவரமாகி வெடிக்கிறது..பொலிஸ் கமிஷனர் ,முதல்வர் ரகுவரனுக்கு  போன் பண்ணி சூட்டிங் ஆடர் கேட்டு நிற்கும் போது ரகுவரன் இப்படிச் சொல்வார்....

"சூட்டிங் ஆடர் கொடுக்கிறதுன்னா எப்பவோ கொடுத்திருப்பன்ல ,அதனால எவ்வளவு பெரிய ப்ரப்லம் வரும் தெரியுமா.ஒன்னு ரெண்டு கண்ணாடி உடைஞ்சா பரவால்ல..நீ கொஞ்சம் சும்மா இரு...நோ அரஸ்ட், நோ கேஸ்,கொஞ்ச நேரம் அவங்களே கத்திட்டு அடங்கிடுவாங்க "

நமது தி.ப.வா.  உம் பழுத்த அரசியல்வாதி ரகுவரன் போல அசட்டையாய் இருந்தாரா அல்லது உண்மையிலேயே ஒன்றையும் புரிந்து கொள்ளமுடியாத பிறவியா என்று தெரியவில்லை..

(ஸபர் அஹ்மத்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.