வாக்குச் சீட்டில் புதிய தெரிவாக வரவுள்ள "எவருக்கும் வோட்டு இல்லை"


தேர்தல் பட்டியலில் புதிய பிரிவு ஒன்றை இணைப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

"எவருக்கும் இல்லை" என்ற பிரிவை இணைப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக தேர்தல்கள் ஆணையகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

இதில் வேட்பாளர் ஒருவர் தனது வாக்கை எந்தவொரு வேட்பாளனருக்கும் பதிவு செய்ய விரும்பாத பட்சத்தில் குறித்த பிரிவிர் பதிவு செய்யக்கூடய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சமூக ஊடகங்கள் மற்றும் வெவ்வேறு நபர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் இதனை இணைப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அண்மையில் இடம்பெற்ற கட்சி செயலாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் அவர்களுக்கு இது தொடர்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

(AdaDerana)
Share:

No comments:

Post a Comment