அப்டேட் : டாக்டர் ஷாபிக்கு 25 வரை விளக்கமறியல் உத்தரவு

Rihmy Hakeem
By -
0


குருநாகல் டாக்டர் ஷாபி ஷிஹாப்தீனை வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க குருநாகல் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சி ஐ டி அவரை இன்று குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தது.
அவரின் மூன்று மாத கால தடுப்புக் காவல் உத்தரவை சட்ட மா அதிபர் திணைக்களம் வாபஸ் பெற்றதாக மன்றில் தெரிவிக்கப்பட்டது.

டாக்டரை தடுத்துவைக்க போதியளவு காரணங்கள் இல்லையென பொலிஸ் தரப்பில் சொல்லப்பட்டது.

இன்றைய தினம் சிங்கள அமைப்புக்கள் நீதிமன்ற வளாகத்தில் கூடி டாக்டரின் விடுதலையை எதிர்த்தபடி கருத்துக்களை ஆங்காங்கே வெளியிட்டு வந்ததால் அங்கு ஒருவித பதற்ற நிலை இருந்தது.

(Tamilan)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)