ஐ.தே.க வுக்குள் நிலவும் நெருக்கடி நிலைமை சாதாரணமான ஒன்று

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவும் நெருக்கடி நிலைமை சாதாரணமான ஒன்று என இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்தள்ளார். 

எந்தவொரு தேர்தலுக்கு முன்னரும் இவ்வாறான நெடிக்கடி நிலைமை ஏற்படுவது இயல்பானது எனவும் அவர் கூறியுள்ளார். 

பியகம பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

(adaderana)
Share:

காற்றின் வேகம் அதிகரிக்கும் ; மின்னல் தாக்குதல் ஏற்படலாம் என்பதால் அவதானமாக இருக்க வேண்டுகோள்

காற்று நிலைமை நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம், கம்பஹா மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மத்திய மலைநாட்டிலும் மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏனைய பிரதேசங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும். 

மேல், மத்திய சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75-100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. 

அனுராதபுரம், மற்றும் மன்னார் மாவட்டங்களில் பல தடவைகள்சிறிதளவானமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். 

சூரியனின் தொடர்பான தென்திசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக இவ் வருடம் ஓகஸ்ட் மாதம் 27 ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் 07 ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. இன்று (31 ஆம் திகதி) முசலிப்பிட்டி, இஹல புளியங்குளம், தம்புத்தேகம, பெரியகுளம் மற்றும் மெதிரிகிரிய ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.12 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது. நேற்று (30 ஆம் திகதி) காலையிலிருந்து தென்மேற்கு மற்றும் தென் கடற்பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும். 

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டைவரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில்பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில்மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும். 

மன்னாரிலிருந்து புத்தளம், கொழும்பு, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும். 

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரைஅதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும். 

கடலில் பயணம் செய்வோரும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள். 

(வளிமண்டலவியல் திணைக்களம்)
Share:

தேர்தலில் 50+ உருவாக்கியுள்ள சமநிலையும்; முஸ்லிம்களுக்கான சாதகமும்.........

50+ உருவாக்கியுள்ள சமநிலையும்; முஸ்லிம்களுக்கான சாதகமும்.........
எந்தத் தேர்தலிலும், ஒரு சிறுபான்மை/சிறு கட்சி ஒரு தேர்தல் கூட்டணியில் சேர்ந்தால் - அவர்கள் மாற்றுக் கூட்டணிக்கு "தேவையில்லாதவர்கள்" அல்லது "எதிரி" என்ற நிலைக்கி ஆளாகி விடுவதுதான் வழக்கம்.
ஆனால், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் சற்று வித்தியாசமாக இருக்கப் போகிறது. எந்த கூட்டணியில் நின்றாலும் மற்ற கூட்டணியிலும் நமது தேவை உணரப்படப்போகிறது.
உதாரணமாக, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் "X" என்ற கட்சி "Y" என்ற கூட்டணியோடு சேர்ந்தால் - "Z" என்ற கூட்டணி X என்ற கட்சியை தேவையில்லாதவராக அல்லது எதிரியாக பார்க்கின்ற மனநிலையிலிருந்து தவிர்ந்துகொள்ளும். உறவு வைத்திருக்கவே விரும்பும்.
இந்த சமநிலை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஏற்படப்போகிறது.
ஏன்என்றால், SLPP யோ, UNP யோ வேறு யாராக இருப்பினும் அளிக்கப்படப்போகும் வாக்குகளில் 50+ என்ற நிலையை அடையப்போவதில்லை.
அதனால், மாற்றுக் கூட்டணிக்கு அளிக்கப்படும் வாக்குகளில் இரண்டாவது தெரிவு வாக்கை வளைத்துப்போடுவதில் கவனமாக இருப்பார்கள். அதனால், தமக்கு இரண்டாவது தெரிவு வாக்குகளை வழங்கக்கூடிய கட்சிகளிடம் அவை மாற்று முகாமில் இருந்தாலும் ஒரு மென்போக்கையே கைக்கொள்ள முனைவர்.
இது முஸ்லிம் சமூகத்திற்கு இரண்டு விதமான நன்மைகளை பெற்றுத்தரும்
1) முஸ்லிம்களுக்கு எதிரான மிக மோசமான இனவாத பிரச்சாரத்தை கட்டுப்படுத்தும்
2) எல்லா கூட்டணிகளும் முஸ்லிம்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வரும்
இந்த சமநிலை ஈஸ்டர் குண்டு வெடிப்பிற்கு பின்னரான சூழ்நிலையில் முஸ்லிம்களுக்கு பெரும் சாதகமான நிலையாக பார்க்க வேண்டும். ஏன்எனில், எதிர்வரும் தேர்தலில்;
👉🏿பொருளாதார வளர்ச்சி
👉🏿வேலைவாய்ப்பு
👉🏿அந்நிய செலாவணி
👉🏿வறுமை ஒழிப்பு
👉🏿புதிய முதலீடு
👉🏿சேவைகள், உட்கட்டமைப்பு அபிவிருத்தி
👉🏿இனப்பிரச்சினை தீர்வு

என்பவற்றை பற்றி பேசுவதை விட,
👉🏿அடிப்படைவாதம்
👉🏿தேசிய பாதுகாப்பு

என்ற இரண்டு விடயங்களே அதிமுக்கியத்துவம் வாய்ந்த விடயங்களாக, "பேசுபொருளாக" மாறி இருக்கிறது. அதனை அடிப்படையாக வைத்தே தமது வேட்பாளர் அறிமுகத்தையும் செய்திருக்கிறார்கள்.
அதாவது, இந்த இரண்டு விடயங்களும் "முஸ்லிம்களின் தலையிலேயே விடிய" இருந்தது.
இவ்விரண்டு விடயங்களின் போர்வையிலும் முஸ்லிம்களின் மீதான இனவாதத்தை கொட்டித் துளாவி - நாட்டுபுற சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம்களுக்கு எதிரான - தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான தேர்தலாக இந்த ஜனாதிபதி தேர்தலை பிரகடனம் செய்யும் நோக்கம் இருந்தது.
ஆனால், மேற்கூறிய சமநிலை இவர்களின் இந்த எண்ணத்தில் இடி விழ வைத்துள்ளது. இப்போது சிறுபான்மை / சிறு கட்சிகளுக்கு எதிராக பேச வேண்டாம் என்ற கண்டிப்பான உத்தரவுகள் பிறப்பிக்கும் நிலை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம்களை இனவாதத்திற்கு காவுகொடுக்கும் மிகப்பெரும் பயங்கர நிலவரத்திலிருந்து முஸ்லிம்களை பாதுகாப்பதில் இந்த சமநிலைக்கு பெரும்பங்குண்டு என்பதை யாரும் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.

(ஏ.எல்.தவம்)
Share:

நீதிமன்றில் ஆஜராகவும் : வியாழேந்திரனுக்கு கோர்ட் உத்தரவு

ரீ.எல்.ஜவ்பர்கான
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் உட்பட ஐவரை, மீண்டும் ஒக்டோபர் 4ம் திகதி  நீதி மன்றத்தில் ஆஜராகுமாறு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சீ.ரிஸ்வான் உத்தரவிட்டுள்ளார்.
மட்டக்களப்பு நகரில், கடந்த செவ்வாய்க்கிழம,  நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தலைமையிலான குழுவினர் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டமானது, பொது மக்களின் அமைதிக்கு குந்தகம் விளைத்தது என்ற காரணத்தினால், இன்றைய தினம் (30)  நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பணிப்புரை விடுக்கபட்டிருந்தது.
இதற்கமைய,  நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் செல்வி மனோகரன் உட்பட ஐவர் இன்று (30) ஆஜரான போது, மீண்டும் அக்டோபர் மாதம் 4ஆம் திகதி ஆஜராகுமாறும், மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் வாக்கு மூலம் வழங்குமாறும்  உத்தரவிடப்பட்டுள்ளது.
சீயோன் தேவாலய தாக்குதிலில் பலியான தற்கொலைக் குண்டுதாரியின் உடலை,  நீதிமன்ற உத்தரவின்பேரில் மட்டக்களப்பு கள்ளியன்காடு மயானத்தில் புதைத்தமையைமைக் கணடித்து,  இவர்கள் ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share:

சஜித்தை வேட்பாளராக்குமாறு தம்புள்ளையில் ஆர்ப்பாட்டம்

க்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவை  ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்குமாறு வலியுறுத்தி, தம்புளையில் மக்கள் இன்று (30) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Share:

30 வருடங்களின் பின்னர் மீண்டும் கஹட்டோவிட்டவில் ஆரம்பமான வாராந்த சந்தைசுமார் முப்பது வருடங்களின் பின்னர் கஹட்டோவிட்டாவில் வாராந்த சந்தை பொல இன்று ஆரம்பிக்கப்பட்டது.

கடைசியாக கஹட்டோவிட்ட மர்ஹூம் தாஹிர் நானா வீட்டு முன் இந்த பொல நடைபெற்றமை கஹட்டோவிட்டாவின் வரலாற்றில் பதியப்பட்ட முக்கிய விடயமாகும்.

இன்று காலையில் வியாபாரிகள் தங்களது கடைத்தொகுதியை அமைப்பதில் ஈடுபாடு கொண்டுள்ளதுடன் பல்வேறுபட்ட வியாபாரிகளும் வருகைதந்த வண்ணமிருந்தனர்.

உள்ளூரில் இருந்து வெளியூர்களுக்கு சென்று மரக்கறி வாங்கியவர்களுக்கும் வெளியூர் பொல இற்கு சிரமத்தோடு சென்று வந்தவர்களுக்கும் ஊர்மக்களுக்கும் அயலூர்வாசிகளுக்கும் நிச்சயம் இந்த பொல வசதியானதாகவும் இலகுவானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் என்பதோடு இந்த அரிய வாய்ப்பை பூரணமாக பயன்படுத்தி ஏற்பாட்டாளர்களுக்கு மேலும் உற்சாகமளிக்கும் வகையில் ஒத்துழைக்குமாறும் வேண்டிக்கொள்ளப்படுகின்றனர்.
(Luthufullah)
Share:

யக்கல, வெரல்லவத்த தொழில்நுட்பக் கல்லூரியில் 4.64 மில்லியன் டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்ட கட்டடம் திறந்து வைக்கப்பட்டதுகைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழான தொழில்நுட்ப கல்வி மற்றும் பயிற்சி திணைக்களத்தினால் கம்பஹா, யக்கல, வெரல்வத்த தொழில்நுட்ப கல்லூரிக்காக 4.64 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய நிர்வாக கட்டிடம், உத்தியோகபூர்வ தங்குமிட வளாகம் மற்றும் கொரிய தொழில்நுட்பத்தில் ஆரம்பிக்கப்பட்ட NVQ 5/6 டிப்ளோமா கற்கையின் பயன்பாட்டுக்கு பெறப்படுகின்றன பயிற்சி கூடங்களை மாணவர்களுக்கு உரித்தாக்கும் நிகழ்வு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில் இடம்பெற்ற போது பிரதம அதிதியாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, பிரதியமைச்சர் கருணாரட்ன பரணவிதான, இராஜாங்க அமைச்சர்களான புத்திக பத்திரன, அஜித் மண்ணப்பெரும, அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக மற்றும் கொரிய நாட்டு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Share:

சிறுபான்மையினர் ஜே.வி.பி. அலையில் அள்ளுண்டு போகலாமா?

 (பிறவ்ஸ்)

நாட்டில் வாழும் சிறுபான்மை மக்கள் தேசியக் கட்சிகள் மீது மிகுந்த அதிருப்தியடைந்துள்ளனர். தமிழ், முஸ்லிம் மக்களின் பேராதரவுடன் அமைக்கப்பட்ட நல்லாட்சி அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை. குறிப்பாக நாட்டின் பொருளாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தருணம் பார்த்து காத்திருந்த மக்கள் விடுதலைக் முன்னணி (ஜே.வி.பி.) இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதற்கு களம்கண்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி கூட்டணி ஊடாக ஜே.வி.பி. ஜனாதிபதி வேட்பாளாராக பெயரிடப்பட்டிருக்கும் அனுரகுமார திசாநாயக்க, இலங்கை அரசியலைப் பொறுத்தவரை சுத்தமான கைகொண்டவர் என பலரும் சிலாகித்துப் பேசுகின்றனர். அவர் ஜனாதிபதியாக வந்தால் நாடு நல்லாயிருக்கும் என்று பலரும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். ஒருகாலத்தில் இதே நம்பிக்கையைத்தான் மைத்திரிபால சிறிசேன மீதும் நாம் கண்மூடிக்கொண்டு வைத்தோம்.
ஜே.வி.பி. என்ன பின்புலத்தில் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குகிறது? அவர்களின் நிகழ்ச்சிநிரல் என்ன? என்பது பற்றியெல்லாம் ஆராயவேண்டிய தேவைப்பாடு உள்ளது. கோத்தாபய ராஜபக்ஷவை அல்லது ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளரை பிடிக்கவில்லை என்பதற்காக மூன்றாவது தெரிவாக அனுரகுமார திசாநாயக்க அமைந்துவிடக்கூடாது. காரணம், மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகத்தான் கடந்த தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு சிறுபான்மை மக்கள் ஆதரவளித்திருந்தனர்.
இவை ஒருபுறமிருக்க, ஜனாதிபதி தேர்தலில் ஜே.வி.பி. வெற்றி பெறுவதென்பது யதார்த்தத்தை மிஞ்சிய ஒரு செயற்பாடாகத்தான் இருக்கும் என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்து. இது பிரதான வேட்பாளர்களை பிரித்தாளும் தந்திரமா அல்லது 51% வாக்குகள் பெறாமல் அவர்களை தடுப்பதற்கான காய்நகர்த்தலா என்பது குறித்தும் வாதப்பிரதிவாதங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
இவையெல்லாம் இருக்கட்டும். ஜே.வி.பி. கட்சியை எனக்குப் பிடிக்கும். அனுரகுமார திசாநாயக்க சிறந்ததொரு தலைவர். அவருக்குத்தான் நான் வாக்களிக்கப் போகிறேன் என்று கூறுபவர்கள் அவர்களின் கொள்கைகளை கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள். அவர்களின் தேர்தல் விஞ்ஞானபத்தில் கூறப்பட்டுள்ள, சிறுபான்மை மக்கள் கட்டாயம் சிந்திக்கவேண்டிய விடயங்களை தொகுத்து தருகிறேன்.
மக்கள் விடுதலை முன்னணியினால் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனம்.
மதம் சார்ந்த தீவிரவாத வெளித்தனத்தையும் இனவாதத்தையும் தோற்கடித்து தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பையும் தேசிய ஒற்றுமையையும் உறுதிப்படுத்துவதற்காக “நாட்டின் முன்வைக்கின்ற விஷேட அலோசனைகள்”
கடந்த 2019 ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தற்கொலைதாரிகளான இஸ்லாம் மதவெறி பிடித்த தீவிரவாதிகளால் கத்தோலிக்க மதஸ்தாபனங்கள் பலவற்றுக்கும் உல்லாச ஹோட்டல்கள் மீதும் தொடுக்கப்பட்ட குண்டுத் தாக்குதலுடன் இலங்கையின் பொதுமக்களின் பாதுகாப்பும் பொதுவான சமூக வாழ்வும் பாரிய அச்சுறுத்தலுக்கும் சவாலுக்கும் உள்ளாகியது. இந்த தாக்குதலுடன் இலங்கையில் அரசியலிலும் பல சவால்கள் தோன்றின…. என்று ஆரம்பமாகிறது அந்த தேர்தல் விஞ்ஞாபனம்.
• பொதுவான மறுசீரமைப்பு ஆலோசனைகள்:
3) இலங்கையில் இன, மாத, பால் வேற்றுமையில்லாது அனைத்து நபர்களையும் குற்றவியல் மற்றும் சிவில் சட்டங்கள் மத்தியில் சமனானவர்களாக கருதவேண்டும். சமனாக நிர்வகிக்க வேண்டும்.
தற்போது இன, மத, பால் அடிப்படையில் வித்தியாசம் காட்டும் சட்டங்களை பொதுச் சட்டத்தின்கீழ் கொண்டுவர வேண்டும். மத உரிமை தனிப்பட்டதாக இருந்தாலும் சட்டங்கள் அரசுக்குரியதாகும். மதம் தொடர்பாக நிலவும் சட்டங்கள் அல்லது சம்பிரதாயங்கள் பொதுச் சட்டத்துக்கு சவாலாக அமையாமல் இருப்பதோடு, பொதுச் சட்டமே எப்போதும் வலுப்பெற வேண்டும்.
4) இன, மத மற்றும் பிரதேச அடிப்படையில் அரசியல் கட்சிகளை ஆரம்பித்து முன்னெடுக்கப்படுதல், பதிவுசெய்தல் ஆகியவற்றை தடைசெய்வதற்கான சட்டத்தை தயாரிக்க வேண்டும்.
• சட்ட மறுசீரமைப்பு:
1) நாட்டில் சகல பிரஜைகளுக்கும் உரித்துடைய பொதுச் சட்டத்தை உருவாக்க வேண்டும். அதற்காக தற்போதிருக்கும் முஸ்லிம் சட்டம், மலைநாட்டுச் சட்டம், தேசவழமைச் சட்டம் எனும் தனியார் சட்டம் ஆகியன திருத்தப்பட்டு ஒரு பொதுவான திருமண சட்டம் சகல இனக்குழுக்களும் பின்பற்றுவதற்கு அமைவானதாக இருக்கவேண்டும். அதேபோன்று அரசியலமைப்பில் அடிப்படை உரிமைகள் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கும். இன, மத, ஆண், பெண் பாகுபாடின்றி அனைவரும் சமமானவர்கள் எனும் கோட்பாட்டின் அடிப்படையில் சகல சட்டங்களையும் தயாரிக்க வேண்டும்.
2) சிறுவர் மற்றும் பெண்கள் சமத்துவம் மற்றும் அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் அடிப்படையில்,
I) திருமணம் செய்வதற்கான வயது பொதுவாக 18ஆக கருதப்படல் வேண்டும்.
II) ஒன்றுக்கு மேற்பட்ட திருமணத்துக்கு சட்டத்தில் இருக்கும் தளர்வை இரத்துச் செய்தல்.
IV) திருமணத்தில் தங்களுடைய இன, மத, மொழி மற்றும் சாதி அடிப்படையில் அழுத்தம் கொடுக்காமல், அதனை தன்னுடைய விருப்பமின்றி மாற்றுவதற்கு அழுத்தம் கொடுப்பதற்கும் தடைவிதித்தல்.
V) திருமணப் பதிவு மற்றும் விவாகரத்து ஆகிய செயற்பாடுகளின்போது சிவில் நிர்வாக மற்றும் சாதாரண நீதிமன்ற தொகுதி நடவடிக்கைகளின் கீழ் உள்ளடக்குதல்.
• மத நிறுவனங்களின் மறுசீரமைப்பு மற்றும் நிர்வாகம்:
3) சகல மதங்களுக்கும் ஓர் அமைச்சு நிறுவப்பட வேண்டும்.
6) மத நிறுவனங்களை மேற்பார்வை செய்வதற்காக தற்போதிருக்கும் சட்டங்களை முறையாக மேற்பார்வை செய்யும் விதத்தில் திருத்தியமைத்தல்.
• கல்வி:
1) இலங்கையில் கல்வி நிறுவனங்கள், பாலர் பாடசாலைகளையும் ஏனைய பாடசாலைகளையும் இன, மத அடிப்படையில் நிறுவப்பட்டுள்ளதை இரத்துச் செய்தல். 
7) நாட்டின் அனைத்து பாடசாலைகளிலும் பொதுவான நாற்காட்டியை (கலண்டர்) உருவாக்குவதற்கான நடவடிக்கை எடுத்தல்.
9) 18 வயது குறைந்த எந்தவொரு பிள்ளைக்கும் சாதாரண பொதுப் பாடநெறிகளை கற்பிக்காத மதக் கல்வியை மட்டும் போதிக்கின்ற கல்வி நிறுவனங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு முடியாதவாறு சட்டங்களை தயாரித்து நடைமுறைப்படுத்தல்.
11) பாரபட்சமின்றி சகல பாடசாலைகளிலும் இனம் அல்லது மத அடிப்படையில் இன்றி சகல பிள்ளைகளும் அழகியல் கல்வியை கற்பிப்பதற்காக சந்தர்ப்பத்தை பெற்றுக்கொடுத்தல். அதற்காக ஆசிரியர்களை பயிற்றுவித்தல். தற்போது மத அழுத்தங்களில் காரணமாக தடைக்குள்ளாகியுள்ள பிள்ளைகளுக்கு அழகியல் பாடநெறியான சித்திரம், சங்கீதம், நடனம், சினிமா, நாடகம், அரங்கற்கலை போன்ற பாடங்களுக்காக ஊக்குவிப்பதற்காக பெற்றோர் மற்றும் சமூகத்துக்கு ஆதரவளித்தல்.
12) வெசாக், நத்தார், புத்தாண்டு, சிவராத்திரி, ரமழான் ஆகிய உற்சவ காலங்களில் சகல மாணவ, மாணவிகளும் பொதுவாக பங்குபற்றும் உற்சவம், கலாசாரம் மற்றும் கலையம்சங்களை பாடசாலை மட்டங்களில் நடத்துதல்.
• இலங்கையர் என்ற அடையாளத்தை உருவாக்குவதற்காக அரச நிறுவனங்கள் மற்றும் 
பொதுவான மறுசீரமைப்புகள்
4) தனியார் நிறுவனங்கள், வியாபார ஸ்தாபனங்களின் பெயர்ப்பலகைகளில் (வழிபாட்டிடங்களை தவிர) மத மற்றும் இன அடையாளத்துடன் கூடிய பெயர்களை உள்ளடக்காது இருத்தல் வேண்டும்.
5) சமூகத்தில் ஒவ்வொருவருக்கும் இடையில் சந்தேகம், நம்பிக்கையின்மை மற்றும் அடையாளம் கண்டுகொள்ள முடியாத வகையில் ஆடைகள் அணிவதை நிறுத்தல். (உதாரணமாக புர்கா, முகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசம் ஆகியன)
• மத கல்விமான்களுக்குரிய விசேட கடமையும் பொறுப்பும்:
2) முஸ்லிம்கள் வர்த்தகம் மற்றும் மதச் செயற்பாடுகளுக்கு மட்டும் என வரையறுக்கப்பட்ட பிரசைகளாக படிப்படியாக தள்ளப்பட்டு வருவதை காணமுடிகிறது. ஒப்பீட்டளவில் ஏனைய சமூகத்திலிருந்து விலகி நிற்கின்றனர். மக்களிடையே புரிந்துணர்வு கட்டாயம் தேவையென்பதால் கலை செயற்பாடுகள், தொழிற்சங்க நடவடிக்கைகள், பெண்கள் அமைப்புகளின் செயற்பாடுகள் விளையாட்டு மற்றும் ஏனைய பொது சமூக வாழ்க்கையுடன் ஒன்றுகலப்பதற்கு அவர்களை ஊக்குவித்தல்.
6) இலங்கையில் முஸ்லிம் பெண்களுக்குள்ள (சிங்களம் மற்றும் தமிழ் பெண்களை ஒப்பிடும்போது) வரையறை சில முஸ்லிம் நாடுகளிலும் இல்லையென்பது முஸ்லிம் நிபுணர்களின் கருத்தாகும். ஆகையால், முஸ்லிம் பெண்களுக்கு நாட்டின் ஏனைய பெண்களுடன் பொது சமூக, கலாசார வாழ்க்கையில் உள்நுழைவதற்கான ஆகக்குறைந்த வழிகளை முஸ்லிம் சமூகம் நிர்மாணித்துக் கொடுத்தல்.
Share:

2019 "போரா" சமூக சர்வதேச மாநாடு கொழும்பில் ; 40 நாடுகளில் இருந்து 40,000 பேர் இலங்கை வருகை

போரா சமூக ஆசூரா தின சர்வதேச மாநாடு ; 
செப். 01 - 10 வரை கொழும்பில்

( மினுவாங்கொடை நிருபர் )

   போரா சமூகத்தினர் நடத்தும் "போரா" சமூக ஆசூரா தின சர்வதேச மாநாடு, செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல், 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை, கொழும்பு - கொள்ளுப்பிட்டியவிலுள்ள போரா சமூக பள்ளிவாசலை மையப்படுத்தி  இடம்பெறவுள்ளது.
 
    போரா சமூகத்தவரின் 2019 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய இச்சிறப்பு போரா  மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, உலகெங்குமிருந்தும் 40 நாடுகளைச் சேர்ந்த 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட 21 ஆம்  போரா சமூகத்தினர் இலங்கை வந்து கொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இதற்காக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அனைத்து ஏற்பாடுகளையும், சுற்றுலாத்துறை அமைச்சும் பாதுகாப்பு அமைச்சும் மேற்கொண்டுள்ளது. 

   கொழும்பு மாநகர சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை, சுற்றுலாத்துறை அதிகார சபை என இதனுடன் தொடர்புபட்ட நிறுவங்களின் ஊடாக இம்மாநாட்டிற்காக கொழும்பிலுள்ள சகல நட்சத்திர ஹோட்டல்களிலும் இடவசதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக 3000 பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

   இம்மாநாட்டில், போரா சமூகத்தின் தலைவர் கலாநிதி ஸெய்யிதினா முபாதல் (முப்படேல்) ஸைபுத்தீன் உள்ளிட்ட அந்தந்த நாடுகளின் தலைவர்களும்  கலந்து சிறப்பிக்கவுள்ளனர். இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை வருபவர்கள், பத்து நாட்கள் இலங்கையில் தங்கியிருப்பர்.

அத்துடன், இவர்களுக்காக கொழும்பு, நீர்கொழும்பு, கண்டி, நுவரெலியா மற்றும் காலி ஆகிய நகர மையங்களிலுள்ள நட்சத்திர ஹோட்டல்களில் தங்குவதற்கான அறைகளையும் சுற்றுலாத்துறை அமைச்சு  ஒதுக்கிக் கொடுத்துள்ளது.

   ஏப்ரல் 21, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றதன் பின்னர், இலங்கையில் மிகப் பெரிய சுற்றுலாத்துறைக்கு போரா இன முஸ்லிம்கள் 40 ஆயிரம் பேர் கொழும்பில் கூடவுள்ளமை, இதுவே முதற்தடவையாகும். 

( ஐ. ஏ. காதிர் கான் )
Share:

இலங்கை நெய்னார் நினைவு விழாவும் சிறப்பு மலர் வெளியீடும் - அன்னாரைப்பற்றி எழுத்து மூலம் பகிருமாறு வேண்டுகோள்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மாநில செயலாளர் செயற்குழு பொதுக்குழு உறுப்பினர் எம்.ஜிஆர். மன்ற தலைவர் மற்றும் அகில இலங்கை அம்மா பேரவை தலைவர், அம்மா தாயகம் திரும்பியோர் நலப்பேரவை தலைவராகவும், சமூக மற்றும் அரசியல் சேவையாளரும், இலங்கை இந்திய உறவு பாலமாகவும் விளங்கிய எனது தந்தை மறைந்த மர்ஹும் இலங்கை நெய்னார் நினைவு தினம் மற்றும் அவர் பற்றிய சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடப்படவுள்ளது.

அன்னாருடனான உங்கள் அனுபவ பகிர்வு அவரைப்பற்றிய உங்கள் எண்ணங்கள், கருத்துக்கள், தனிப்பட்ட நிகழ்வுகள் எதுவாக இருந்தாலும் அவற்றை எழுத்து மூலம் பகிர்ந்துகொள்ள கோருகிறோம்.

அவை நினைவு மலரில் பிரசுரிக்கப்பட்டு அம்மலர் வெளியீட்டு விழா இலங்கை தலைநகர் கொழும்பில் மிக பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.
நினைவு மலர் பூர்த்தியானதும் விழாவுக்குரிய திகதி தீர்மானிக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இது தொடர்பான ஆலோசனைகள் மற்றும் மேலான வழிகாட்டல்களை வழங்கி வைக்குமாறு உங்கள் அனைவரிடமும் வேண்டிநிற்கிறேன்.

தொடர்புகளுக்கு
Mob. :+94 772 629292
Mail: nainarimran@gmail.com

நன்றி
இவன்,
இலங்கை இம்ரான் நெய்னார்
தலைவர்
இலங்கை நெய்னார் சமூக நல காப்பகம்
Share:

கஹட்டோவிட்டவில் நடைபெற்ற டெங்கு ஒழிப்பு நடவடிக்கை!

கஹட்டோவிட்ட கிராம பாதுகாப்பு அமைப்பு மற்றும் கஹட்டோவிட்ட மேற்கு கிராம பாதுகாப்பு அமைப்பினது ஏற்பாட்டில் டெங்கு நுளம்புகளை ஒழிப்பதற்காக, நேற்று முன்தினம் (26) கஹட்டோவிட்ட பிரதேசத்தில் நடைபெற்ற புகை அடித்தல் நடவடிக்கையின் போது.

(தகவல் - நாஸர் JP)


Share:

நன்னீர் மீனவர்களின் வீடமைப்பு உதவிக்கான காசோலை வழங்கும் நிகழ்வு!
நன்னீர் மீனவர்களை முன்னேற்றும் செயற்திட்டத்தின் கீழ் ரூபா 100,000 வீடமைப்பு உதவு தொகை கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆரச்சி தலைமையில் (27) நடைபெற்றது. 

அதன் போது ரூபா 100,000 காசோலையை வீடமைப்பு உதவு தொகையாகப் பெற்ற நன்னீர் மீனவ குடும்பங்கள் 34 ஆகும். 
National Aquaculture Development Authority of Sri Lanka (NAQDA) இனால் அமுல்படுத்தப்படும் "ஏரி, கிராமத்துடன் தியவர அருண" வேலைத்திட்டத்தின் கீழ் நன்னீர் மீனவ மக்களின் முன்னேற்றத்திற்கு கௌரவ இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆரச்சியின் ஆலோசனைக்கு அமைய விசேட வீடு அபிவிருத்தி வேலைத்திட்டம் நடைபெற்று வருகிறது. அதன் கீழ் தங்காலை தொகுதி நன்னீர் மீனவர்களுக்கான வீடமைப்புத் திட்டத்திற்கு முதல் கட்டமாக ரூபா 50,000 இற்குரிய காசோலை இதற்கு முன்னர் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

அங்கு இராஜாங்க அமைச்சர் உரையாற்றுகையில், "இந்த வீடமைப்பு உதவு தொகை திட்டத்தின் கீழ் சிறந்த மீனவருக்கு அந்த உதவியை வழங்க நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்கு முந்திய ஆட்சியிலும் இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெற்றன. ஆனால் அந்த உதவிகளை அவர்களுக்குள்ளேயே பங்கிட்டுக் கொண்டனர். அப்போது எந்த வீடும் கட்டப்படவில்லை. உதவி பெற்றவர்களும் இல்லை. ஆனால் நாங்கள் அரசு என்ற வகையில் தற்போது சரியான நடவடிக்கைகளை செய்து வருகிறோம்." 

"மீனவர்களின் துக்கங்களை விளங்கியிருக்கும் அமைச்சர் என்ற வகையில், அன்புடன் உங்கள் அனைவரினதும் நாளைய தினம் வளமானதாக அமையவும் இந்தத் தொழிலினை பாதுகாக்கவும் நான் பாடுபடுகிறேன். அதே போன்று சகல மீனவர்களும் முன்னேற எதிர்காலத்திலும் பாடுபடுவேன்" என்றும் இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆரச்சி அவர்கள் மேலும் தெரிவித்தார்.

        
Share:

அனைத்து வேட்பாளர்களும் மனுத்தாக்கல் செய்த பின்னரே எமது ஆதரவை அளிக்கவுள்ளோம்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்ததன் பின்னரே அவர்கள் தொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுப்பதாக அமைச்சர் ரிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார். 

அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். 

இதுவரையில் வேட்பாளர் குறித்து எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை எனவும் கட்சியே அது குறித்த முடிவை எடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார். 

தேர்தல் நடைபெறும் திகதி இதுவரை அறிவிக்கப்படவில்லை எனவும் வேட்பு மனு கோரளுக்கான திகதியும் இதுவரை அறிவிக்கப்படாத நிலையில் இரண்டு கட்சிகள் மாத்திரம் தத்தமது வேட்பாளர்களை அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார். 

எனவே அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்த பின்னர் அவர்களில் நாட்டுக்கும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப கூடியவர் யார் என்பதை தீர்மானித்த பின்னர் முடிவை அறிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

சஜித் பிரேமதாச தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு கலந்துரையாடியுள்ளதாகவும் அவ்வாறு உங்கள் கட்சியுடனும் பேசினாரா என ஊடகவியலாளர்கள் இதன் போது வினவினர். 

அவ்வாறானான கலந்துரையாடப்படவில்லை எனவும், யாருக்கு ஆதரவளிக்க போகின்றோம் என்பது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை எனவும் தெரிவித்தார். 
Share:

ஒழுக்க விதிகளை மீறிய உறுப்பினர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் SLFP

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்க விதிகளை மீறிய மக்கள் பிரநிதிகளுக்கு எதிராக எடுக்கவுள்ள நடவடிக்கைகளை விரைவுபடுத்த அந்த கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது. 

கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்சியின் மத்திய செயற்குழு நேற்று (26) கூடியது. 

இதன்போது சுதந்திரக் கட்சியின் பல்வேறு பதவிகளில் மாற்றம் செய்யப்பட்டது 

அதன்படி, சுதந்திரக் கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசநாயக்க நீக்கப்பட்டுள்ளார். 

அவருக்கு பதிலாக லசந்த அழகியவன்ன சுதந்திரக் கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

மேலும், பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க வகித்த சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமாரா திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். 

மேலும் வெற்றிடமாகியுள்ள பல பதவிகளுக்கும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்தார்.

(adaderana)
Share:

சஜித் ஜனாதிபதி வேட்பாளராக வருவதற்காக தேங்காய் உடைத்த ஆதரவாளர்கள்சஜித் பிரேமதாசாவை ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க கோரியும் ஜனாதிபதி வேட்பாளர் நியமனம் நிமித்தமாக கட்சியினுள் ஏற்பட்டிருக்கும் குழப்ப நிலையை முடிவு செய்ய உதவுமாறு கோரியும் தேங்காய் உடைத்து பிரார்த்தனை நிறைவேற்றப்பட்டது. 

திருகோணமலை பத்திரகாளி தேவஸ்தானத்திற்கு முன்பாக அமர்ந்திருக்கும் பிள்ளையாருக்கு இவ்வாறு தேங்காய் உடைத்து பிரார்த்னைகள் இடம்பெற்றது. 

இப்பிராத்தனையில் நூற்றுக்கு அதிகமான ஐக்கிய தேசியக் கட்சி ஆதவாளர்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. 

(அத தெரண)
Share:

உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் கைது விவகாரம் ; ஜமாஅதே இஸ்லாமியின் ஊடக அறிக்கை

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் அமீர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் இன்று (25.08.2019) அதிகாலை கைது செய்யப்பட்டார். தேசிய தவ்ஹீத் ஜமாஅத்துக்கு அவர் உதவியதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அதுபற்றி விசாரித்து வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்கு அவரை கைது செய்வதாகவும் கைது செய்ய வந்த குறித்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இது எத்தகைய அடிப்படைகளுமற்ற ஒரு குற்றச்சாட்டாகும் என்பதை இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி மிக உறுதியாக தெரிவித்துக் கொள்ள விரும்புகிறது.

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி 1954 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் ஒரு பதிவு செய்யப்பட்ட, நடுநிலையான சிந்தனையின் அடிப்படையில் செயல்படும் சமூக சமய இயக்கமாகும். அது சட்டபூர்வமான வழிமுறைகளில் வெளிப்படைத் தன்மையோடு இயங்கும் ஒரு அமைப்பு என்பதுடன் எல்லாவிதமான தீவிரவாதங்களுக்கும் எதிரானதாகும்.

உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் கடந்த 24 வருடங்களாக இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியை நடுநிலைச் சிந்தனையோடு வழிநடத்திய ஒருவர் என்பதை பொதுவாக இந்த நாட்டு மக்களும் குறிப்பாக முஸ்லிம் சமூகத்தினரும் நன்கறிவர்.

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமிக்கோ அதன் முன்னாள் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களுக்கோ தடைசெய்யப்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்புடனோ அல்லது வேறு எந்த பயங்கரவாத அமைப்புகளுடனோ எத்தகைய உறவும் இல்லை என்பதை ஜமாஅத் திட்டவட்டமாக கூற விரும்புகிறது.

இந்த விசாரணைகளை மேற்கொள்கின்ற சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் தரப்பினர் நீதியான விசாரணைகளை மேற்கொண்டு உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் தொடர்பில் நியாயம் வழங்குவார்கள் என்று இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி உறுதியாக நம்புகிறது.

ஊடகப் பிரிவு
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி
25.08.2019
Share:

முன்னைய அரசாங்கம் கொடுத்த நெருக்கடிகள் தற்போது தீர்ந்துள்ளது, ஆனால் பலவற்றின் மீது விமர்சனம் உள்ளதுகடந்தகால அரசாங்கதை விட, ஆட்சிக்கு வந்துள்ள எங்களது அரசாங்கமே சிறுபான்மை மக்களின் விடயத்தில் அதிக அக்கறை காட்டுகிறது. சிறுபான்மை மக்களுக்கு எவ்வளவு தூரம் உரிமைகளையும் சலுகைகளையும் வழங்க முடியுமோ அவ்வளவு தூரம் வழங்குவதற்கான முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 

தனிப்பட்ட விடயமாக இந்தியா சென்றுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நேற்று (24) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க. ஸ்டாலினை சினேகபூர்வமாக சந்தித்து கலந்துரையாடினார். 

இதன்போது பாராளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர். பாலு, தயாநிதிமாறன், ஆலந்தூர் பாரதி ஆகியோர் உடனிருந்தனர். 

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு கூறினார். 

அங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது, எனது தனிப்பட்ட விடயமாகவும், நல்லிணக்க விடயமாகவும் மு.க. ஸ்டாலினை சந்தித்தேன். இலங்கையின் அரசியல்களம் மற்றும் இந்திய, தமிழக விவகாரங்கள் குறித்து எங்களுக்குள் கருத்துகளை பகிர்ந்துகொண்டோம். முக்கியமான அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தவுள்ள ஜனாதிபதி தேர்தல், நாட்டின் தற்போதைய அரசியல் போக்கு குறித்தும் எங்களுக்குள் பேசிக்கொண்டோம். 

2015 ஆம் ஆண்டு எங்களுடைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல் இன்றுவரை இலங்கை சிறுபான்மை சமூகத்தின் விடயத்தில் எவ்வளவு தூரம் உரிமைகளை கொடுக்க முடியுமோ அதற்கான முயற்சிகள் நடக்கின்றன. பல விடயங்கள் இன்னும் தீர்ந்தபாடில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தாலும், முன்னைய அரசாங்கம் கொடுத்த நெருக்கடிகள் தற்போது நீங்கியுள்ளது. 

அபகரிக்கப்பட்ட உரிமைகளை மீட்டுக் கொடுத்தல், புதிய சட்டவாக்கங்கள், அதிலே சிறுபான்மை சமூகங்களுக்கு அநியாயங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்வது போன்ற விடயங்களில் எங்கள் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தியுள்ளது. கடந்த அரசாங்கத்தோடு ஒப்பிடுகையில் தற்போதைய அரசாங்கம் சிறுபான்மை மக்களுக்கு இயன்ற சில விடயங்களை செய்துள்ளது. இன்று முற்றுப்பெறாமல் இருக்கும் சர்ச்சைகள், விமர்சனங்கள் இல்லாமலும் இல்லை. 

இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் நடந்த பின்னணியில் அவசரகாலச் சட்டம் அவசியமாக தேவைப்பட்டது. விசாரணையை துரிதப்படுத்துவதற்கும், குற்றவாளிகளை இனம்காண்பதற்கும் சந்தேக நபர்களை கண்டுபிடிப்பதற்கும் அவசரகாலச் சட்டத்தில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது பயங்கரவாத தடை குறித்த விடயங்களிலும் அவசரகாலச் சட்டம் தேவையற்றது என்பதை அரசாங்கம் உணர்ந்துள்ளது. 

தனிமனித சுதந்திரம், மனித உரிமைகள் விவகாரம் போன்ற விடயங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அதேநேரம் அவசரகாலச் சட்டம் நீடித்தால் இலங்கைக்கு வருகின்ற உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படுகின்றது. இப்படியான விடயங்களை கருத்திற்கொண்டுதான் தேவைக்கதிகமாக அவசரகாலச் சட்டத்தை நீடிக்காமல் அதனை வாபஸ் பெற்றுள்ளோம் என்றார். 

முன்னதாக சென்னை மண்ணடியில் அமைந்துள்ள இந்திய யூனியன் முஸ்லிம் அலுவலகத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு தலைமை நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பளித்தார்கள். இதில் மாநில முதன்மை துணைத் தலைவர் எம். அப்துல் ரஹ்மான், மாநில செயலாளர்கள் நிஜாம்தீன், காயல் மகபூப், மாவட்ட தலைவர் ஜெய்லாபுதீன், ரவண சமுத்திரம் தமீம் அன்சாரி, ஊடகவியலாளர் எம்.கே. ஷாகுல் ஹமீது மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Share:

உனக்கென்னப்பா கெம்பஸ் போயிட்டே ; திரைக்குப் பின்னால் இருக்கும் வலிகள்


2012 இல் A/L எழுதி ரிசல்ட் வந்த நாளிலே இருந்து பலரும் சொல்லும் ஒரு வசனம்.... எனக்கு மட்டுமல்ல.... கெம்பஸ் போன எல்லோரும் கேட்கும் ஒரு வசனம் தான்... இது சாதாரணமாய் சொல்லும் ஒரு வசனமாய் இருப்பதில்லை எப்போதும்.... அதை சொல்லும் தொனியில் மகிழ்ச்சி😊, ஏமாற்றம்😏, பொறாமை😡 என்று பல உணர்வுகளின் வெளிப்பாடு இருக்கும்....

ஆனால் எல்லோரும் நினைப்பது போல கெம்பஸ் போனவுடன் ஒருவரது வாழ்க்கை பூரணமாகி விடுவதில்லை....
வாழ்க்கையின் போராட்டமே அதன் பின்னர் தொடங்குகிறது.... வெளிநாடு சென்று போராடும் ஒரு இளைஞனின் போராட்டத்துக்கு சற்றும் குறைவில்லாத ஒரு போராட்டம் இங்கும் இருக்கிறது...😔
ஒழுங்கான சாப்பாடு கிடைப்பதில்லை...

💔
ஊருக்கு போக லீவு கிடைப்பதில்லை...💔
பெருநாளைக்கு கூட லீவு ஒழுங்காய் கிடைப்பதில்லை....💔
உடன் பிறப்புகளினதும் நண்பர்களினதும் எத்தனையோ விசேஷங்களில் கலந்து கொள்ள முடிவதில்லை....💔
எத்தனையோ ஜனாஸாக்களில் கலந்து கொள்ள முடிவதில்லை....💔
எல்லாவற்றுக்கும் மேலே 25 26 27 28 வயதுகளில் கூட பெற்றோரின் தயவில் அவர்களது உழைப்பிலே வாழ வேண்டிய நிர்ப்பந்தம்.... ஆயிரம் கனவுகள் இருந்தும் எதுவுமே செய்து கொள்ள முடியாத நிலைமை...

  Exams, assignment, presentation, Osce, Viva என்று ஆயிரம் சிக்கல்கள்.... இவை அனைத்தையும் தாண்டி வந்தாலும் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை எடுப்பதில் சிக்கல்.... உரிய வயதில் திருமணம் செய்வதில் சிக்கல்... குடும்பத்துக்கு கடமைகள் செய்வதில் சிக்கல்...... இப்படி பல ஆயிரம் சிக்கல்களுக்கு மத்தியில், கெம்பஸ் வாழ்க்கையை அனுபவிக்கும் ஜீவன்களை பார்த்து, இந்த சமூகம் ஒற்றை வார்த்தையில் கூறி விடும்,,,,,😥😥

#உனக்கென்னப்பா_கெம்பஸ்_போயிட்டே

(Ayas Ahmed)
Share:

எங்களிடம் ஒரு தேசிய வேலைத்திட்டம் உள்ளது, வெற்றியின் எதிர்பார்ப்பு உள்ளது, மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்

எங்களிடம் ஒரு தேசிய வேலைத்திட்டம் உள்ளது, வெற்றியின் எதிர்பார்ப்பு உள்ளது,
மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் ...
தோழர் விஜித ஹேரத் ம.வி.மு இன் பிரச்சார செயலாளர்

ம.வி.மு உட்பட பல்வேறு அரசியல் குழுக்கள், வெகுஜன அமைப்புகள், அறிஞர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் கலைஞர்கள் தேசிய சக்தியாக ஒன்றிணைந்துள்ளனர். எங்கள் வேட்பாளர் 18 ஆம் தேதி காலி முக திடல்  மைதானத்தில் உரையாற்றினார். இந்த பேரணியை வெற்றிபெற உதவிய அனைவருக்கும் நன்றி. உலகெங்கிலும் உள்ள பல இலங்கையர்கள் பேரணிக்கு ஆதரவு வழங்கி எங்களுடன் சேர்ந்து கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றிகள்.

தேசிய மக்கள் இயக்கம் என்ற வகையில் ஜனாதிபதி வேட்பாளரை முன் ஏற்பாடுகளுடன்  நியமித்துள்ளோம் . அதற்காக நாங்கள் கடந்த காலத்தில் நன்கு திட்டமிடப்பட்ட கொள்கையை தயார் செய்துள்ளோம். இந்த நிகழ்வில் ஏராளமான அறிஞர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் கலைஞர்கள் பங்கேற்றனர். நமது நாட்டு மக்கள் தற்போது ஐக்கிய தேசிய கட்சி மற்றும் மொட்டு கட்சி என்பனவற்றில் வெறுப்படைந்துள்ளனர். ரணில்-மைத்ரி அரசாங்கமும் அதில் ஜனாதிபதி தேர்தல் விடயத்தில் சோர்வாக உள்ளது. மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாற்று அரசியல் நிகழ்ச்சி நிரலைக் கொண்ட ஒரு சக்தி தேவை. அந்த மாற்றீட்டிற்கு ஒரு அரசியல் தலைமையை வழங்க தேசிய மக்கள் படை உருவாக்கப்பட்டுள்ளது. மக்களை பொருளாதார துயரத்திலிருந்து விடுவிப்பதற்கான மாற்று பொருளாதாரக் கொள்கையை தேசிய மக்கள் சக்தி இயக்கம்  பிரதிபலிக்கிறது.

இலங்கையை உருவாக்குவோம் என்ற தலைப்பில்  பிப்ரவரி 19 அன்று நாங்கள் கொள்கையை தொடங்கினோம். இதை தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களான  தேசிய அறிவுசார் அமைப்பு வழங்கியது. தேசியக் கொள்கையின் அடிப்படையில்தான் நாங்கள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகிறோம். கல்வி, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம், விவசாயம், போக்குவரத்து, கலை, கலாச்சாரம், தேசத்தைக் கட்டியெழுப்புதல், குடியுரிமைப் பொறுப்புகள், வெளியுறவுக் கொள்கை, தேசிய பாதுகாப்பு, தேசிய ஒற்றுமை, மோசடி மற்றும் சட்ட அமுலாக்கம் ஆகிய அனைத்து அம்சங்களையும் இந்தக் கொள்கை உள்ளடக்கியுள்ளது. காலி முக திடல் பேரணியின் பின்னர் வங்குரோத்தான  சில அரசியல் குழுக்கள், எங்கள்  வேட்பாளருக்கு கொள்கை ஒன்று இல்லை என  என்று எங்கள் மீது குற்றம் சாட்டியுள்ளனர். இது ஒரு ஆதாரமற்ற குற்றச்சாட்டு. கொள்கை அறிவிப்பை பல மாதங்களுக்கு முன்பு நாங்கள் வெளியிட்டோம் அந்த கொள்கை அறிக்கையை செயல்படுத்தக்கூடிய ஒரு வேட்பாளரை நாங்கள் நியமித்துள்ளோம் . மக்கள் சந்தேகம் கொள்ள தேவையில்லை . மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாட்டைக் காப்பாற்ற, மக்களின் பசியைப் போக்க, இளைஞர்களின் வேலையின்மைக்கு விடை காணவும், நிலப் பிரச்சினைக்கு தீர்வு காணவும், அரசியல் கைதிகளின் பிரச்சினைகளைத் தீர்க்கவும் ஒரு தேசியக் கொள்கையை வகுக்க வேண்டும். ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு ஜனாதிபதியால் மட்டுமே நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது. எங்கள்  கொள்கையை வெற்றிபெறச் செய்ய அரசாங்கத்தின் அதிகாரம் தேவை. 19 வது திருத்தத்திற்குப் பிறகு ஜனாதிபதிக்கு நிறைவேற்று அதிகாரங்கள் இல்லை. அவர் அமைச்சராகவும் . இராணுவ தலைவராகவும் மட்டுமே  இருக்கிறார், ஆளுநர்களை நியமித்தல், வெளிநாட்டு தூதர்களை நியமித்தல் உட்பட பல விதிகள் உள்ளன.

இருப்பினும், நாட்டைக் கட்டியெழுப்பும்   செயல்முறை அரசாங்கத்தைப் பொறுத்தது. நாங்கள் அதை ஏற்கனவே பார்த்தோம். இதனால்தான் நாங்கள் நீண்ட காலமாக விவாதித்து கொள்கை ரீதியான திட்டத்தை முன்வைத்தோம். எங்கள் அறிக்கையைப் பற்றி ஏராளமான மக்களுடன் நீண்ட கலந்துரையாடலுக்குப் பிறகு நாங்கள் காலி முக திடலுக்கு அவர்களை அழைத்து வந்தோம். அனைத்து துறைகளிலும் உள்ள  ஏராளமான வல்லுநர்கள், கல்வியாளர்கள், பேராசிரியர்கள், கலைஞர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் இதில் கலந்துகொண்டனர்.

பேரணிக்குப் பிறகு, சிலர் வருத்தப்பட்டனர். கம்மன்பிலா போன்ற அரசியல் குழந்தைகள்  காலி முக திடல்  பேரணியைப் பற்றி பேசுகிறார்கள். இந்த அரசியல் குழந்தைகள் கவனத்தை ஈர்க்க பொம்மைகளை தரையில் வீசுகிறார்கள். எங்களுக்கு கவலையில்லை. ஜூலை 18 ஆம் தேதி நாட்டின் வளர்ச்சியில் ஒரு திருப்புமுனையாகும்  குறித்தது, இது முழு இலங்கை மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தியது. நாட்டை மாற்ற மாபெரும் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் . தேசிய மக்கள் படையின் வேட்பாளராக பரிந்துரைக்கப்பட்ட தோழர் அனுரா திசாநாயக்க, விவசாயிகள், மீனவர்கள் மற்றும் மாணவர் தொழிலாளர்களின் இதயத்தை வென்றவர் பல ஆண்டுகளாக அரசியல் முதிர்ச்சியும் கொண்ட அரசியல்வாதியாக இருந்து வருகிறார். அவருடன் நாங்கள் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராக உள்ளோம்.

ஜனாதிபதித் தேர்தல் மூன்று மாதங்களில் நடைபெற உள்ளது. ஐக்கிய தேசிய கட்சி  மற்றும் ராஜபக்க்ஷ முகாமின் கொள்கைகளில் எந்த மாற்றமும் இல்லை. அவர்களின் கொள்கைகள் இரண்டும் ஒத்தவை. திருட்டு, கழிவு மற்றும் ஊழல் ஆகியவை அந்த முகாமின் தனிச்சிறப்புகளாகும். அவர்களை  சுற்றி நீதிமன்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், குற்றவாளிகள் உள்ளனர். அவர்களால்  மக்கள் நிர்வாகத்தை உருவாக்கி  பொருளாதாரத்தை பொருளாதாரத்தை எவ்வாறு கட்டியெழுப்புவது? அவர்கள் நாட்டைக் ஆள  தகுதியானவர்களா? கடந்த 70 ஆண்டுகளாக  நாட்டை  கட்டியெழுப்ப முடியாது என்பதை அவர்கள் நிரூபித்துள்ளனர். எனவே, திருடர்களின் முகாமுக்கு எதிரான  ஒரு மாற்று அமைப்பு  தேசிய சக்தியாகும். மக்களுக்கு ஒரே மாற்று தேசிய சக்தி. எங்களிடம் நல்ல கொள்கை உள்ளது. அதைச் செயல்படுத்த எங்களுக்கு நல்ல அரசியல் தலைமை உள்ளது, மேலும் முற்போக்கான ஜனநாயகத்தை மதிக்கும் அனைவரையும் அந்தக் கொள்கையை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த முன்வருமாறு அன்புடன்  அழைக்கிறோம்.       
                                                                                                                                         
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தல் ...

அரசாங்கங்களை உருவாக்க ஜேவிபி ஒருபோதும் முயற்சிக்கவில்லை. ஜனாதிபதி தேர்தல்களில் பல்வேறு தந்திரோபாயங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு அரசியல் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, 2015 நாடாளுமன்றத் தேர்தலில், நாங்கள் ஜே.வி.பி.யில் தனித்தனியாக போட்டியிட்டோம். ஐக்கிய தேசிய கட்சி தனியாக போட்டியிட்டது. பாராளுமன்றத் தேர்தலில் மைத்ரீ மற்றும் மஹிந்தா அணி இணைந்து ஒரு அணியாக போட்டியிடுகிறது. நிறைவேற்று ஜனாதிபதி  பதவியை ஒழிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை ஜேவிபி எடுத்துள்ளது. ஒருபுறம், ஜே.வி.பியின் கருத்து கருத்தியல் ரீதியாக வென்றது. நிறைவேற்று ஜனாதிபதி முறையை  அறிமுகப்படுத்திய ஐக்கிய தேசிய கட்சி கூட  நிர்வாக ஜனாதிபதி பதவியை ஒழிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு வந்துள்ளது. வெற்றி பெறும் நோக்கத்துடன் ஜனாதிபதித் தேர்தலுக்கு நாங்கள் இப்போது முன்வந்துள்ளோம். மேலும், அரசாங்கத்தை அமைப்பதற்கான  ஒரு திட்டமிட்ட திட்டத்துடன் நாங்கள் போட்டியிடுகிறோம்.
எதிர்காலத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளுடன் ஜனாதிபதித் தேர்தல் குறித்து விவாதிக்க முடிவு செய்துள்ளோம்.

ம.வி.மு இன் மத்திய குழுவின் உறுப்பினர் தோழர் லக்ஷ்மன் நிபூனராச்சியும் கலந்து கொண்டார்.

ஊடக பிரிவு
மக்கள் விடுதலை முன்னணி
2019.08.22
Share:

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here