ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்ததன் பின்னரே அவர்கள் தொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுப்பதாக அமைச்சர் ரிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார். 

அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். 

இதுவரையில் வேட்பாளர் குறித்து எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை எனவும் கட்சியே அது குறித்த முடிவை எடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார். 

தேர்தல் நடைபெறும் திகதி இதுவரை அறிவிக்கப்படவில்லை எனவும் வேட்பு மனு கோரளுக்கான திகதியும் இதுவரை அறிவிக்கப்படாத நிலையில் இரண்டு கட்சிகள் மாத்திரம் தத்தமது வேட்பாளர்களை அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார். 

எனவே அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்த பின்னர் அவர்களில் நாட்டுக்கும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப கூடியவர் யார் என்பதை தீர்மானித்த பின்னர் முடிவை அறிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

சஜித் பிரேமதாச தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு கலந்துரையாடியுள்ளதாகவும் அவ்வாறு உங்கள் கட்சியுடனும் பேசினாரா என ஊடகவியலாளர்கள் இதன் போது வினவினர். 

அவ்வாறானான கலந்துரையாடப்படவில்லை எனவும், யாருக்கு ஆதரவளிக்க போகின்றோம் என்பது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை எனவும் தெரிவித்தார். 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.