காஸ்மீர் மாநிலத்துக்கு இருந்துவந்த சிறப்பு அதிகாரங்களை நீக்குவதாக இந்திய அரசு அறிவித்ததனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புக்கு பிரதான எதிர்கட்சிகள் உட்பட ஏனைய மாநில கட்சிகளும் அச்சமடைந்ததுடன் தங்களது கண்டனங்களை வெளிப்படுத்தி உள்ளனர்.
இந்தியா - பாகிஸ்தான் ஆகிய நாடுகள் ஆங்கிலேயர்களிடம் சுதந்திரம் அடைந்ததிலிருந்து இன்று வரைக்கும் காஸ்மீர் பிரச்சினை தீர்க்க முடியாததாக இருந்து வருகின்றது.
இந்த பிரச்சினையினால் 1948, 1965, 1999 ஆகிய ஆண்டுகளில் இந்தியா - பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையில் மூன்று தடவைகள் போர் நடந்துள்ளது.
காஸ்மீர் மாநிலத்தின் ஜம்மு காஸ்மீர் பிரதேசம் இந்தியாவினதும், ஆசாத் காஸ்மீர் பிரதேசம் பாகிஸ்தானினதும் மற்றும் கிழக்கு பகுதி சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது.
1962 இல் சீனா - இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையில் நடைபெற்ற யுத்தத்திலேயே இந்தியாவிடமிருந்த காஸ்மீர் பகுதியின் “அக்சாய் சின்” என்ற பிரதேசத்தை சீனா கைப்பேற்றியது.
இந்திய கட்டுப்பாட்டின்கீழ் உள்ள காஸ்மீர் பகுதியில் 7௦ வீதமானோர் முஸ்லிம்களும், மற்றும் இந்து, பௌத்தம், சீக்கியர், கிருஸ்தவர்கள் என ஏனைய 3௦ வீதத்தினர்கள் வாழ்கின்றார்கள்.
காஸ்மீர் இந்தியாவுடன் தொடர்ந்து இணைந்திருப்பதா ? பிரிந்து செல்வதா ? என்று அம்மக்களின் விருப்பத்திணை அறிந்துகொள்ளும் பொருட்டு அங்கு சர்வசன வாக்கெடுப்பு நடாத்த வேண்டும் என்ற ஐ.நா வின் தீர்மானத்தினை இதுவரையிலும் இந்தியா அலட்சியம் செய்துகொண்டே வருகின்றது.
இந்தியாவின் ஏனைய மாநிலங்களோடு ஒப்பிடுகையில் காஸ்மீர் மாநிலத்துக்கு விசேட சிறப்பு அதிகாரங்கள் உள்ளது.
அதாவது பாதுகாப்பு, வெளிநாட்டு அலுவல்கள், தொடர்பாடல் ஆகிய மூன்று அதிகாரங்கள் மாத்திரமே இந்திய மத்திய அரசிடம் உள்ளது.
நிதி, காணி உற்பட ஏனைய அனைத்து அதிகாரங்களும் காஸ்மீர் மாநில அரசுக்கு உள்ளது. அத்துடன் இந்தியாவின் ஏனைய மாநிலத்தவர்கள் காஸ்மீரில் நிலம் வாங்கவும் முடியாது, அரச தொழில் செய்யவும் முடியாது.
காஸ்மீர் மாநிலத்துக்கென்று தனியான தேசிய கொடியும் உள்ளது. அரச நிகழ்வுகளிலும் அந்த கொடியையே ஏற்றுவார்கள். இந்திய கொடியை ஏற்றவேண்டும் என்ற கட்டாயம் அங்கு இல்லை.
சுருக்கமாக கூறப்போனால் அது இந்தியாவின் ஆக்கிரமிபுக்குள் இருக்கின்ற ஓர் தனியான நாடு என்றுதான் கூறவேண்டும்.
அம்மாநிலத்தை கட்டுப்படுத்துவதற்கு இந்த மத்திய அரசு பாராளுமன்றத்தில் ஏதாவது சட்டம் இயற்றுவதென்றால், அங்கு இயற்றப்பட்ட சட்டம் காஸ்மீர் மாநில சட்டசபை அங்கீகாரம் வழங்க வேண்டும்.
அவ்வாறு அங்கீகாரம் வழங்காவிட்டால் அது சட்டமாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
இவ்வாறான நிலையில் சில தினங்களுக்கு முன்பு மேலதிக இராணுவத்தினர்கள் கஷ்மீர் பிரதேசத்தில் குவிக்கப்பட்டதுடன், காஸ்மீருக்கு இருந்துவருகின்ற விசேட உரிமைகளை நீக்குவதாக இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
இந்த அறிவித்தல் சட்ட அந்தஸ்தை பெறுமா ? அல்லது உலகின் சிறந்த ஜனநாய நாடுகளிள் ஒன்றாக கருதப்படுகின்ற இந்தியா தனது இராணுவ பலத்தினைக்கொண்டு இரும்புக்கரங்களால் சட்டத்துக்கு முரணாக நடந்துகொள்ளுமா ? பொறுத்திருந்து பார்ப்போம்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.