கலை இலக்கிய திறந்த மட்டப் நிகழ்வுகள் ஒன்பதில் முதலாம் இடம் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார் கவிதாயினி எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா.

மத்திய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அணுசரனையுடன் பிரதேச செயலக மட்டத்தில் நடாத்தப்பட்ட கலை இலக்கிய திறந்த மட்டப் போட்டி 2019 இல் மீரிகம பிரதேச செயலகப் பிரிவில் பஸ்யாலயைச் சேர்ந்த கவிதாயினி எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா ஆங்கிலம் தமிழ் என இரு மொழிகளிலும் பங்கு பற்றி ஒன்பது நிகழ்வுகளில் முதலாம் இடம் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
இலங்கை அதிபர் சேவை தரம் 02 இல் பதவி வகிக்கும் இவர் கல்லெலிய அலிகார் முஸ்லிம் மஹா வித்தியாலய பிரதி அதிபராவார்.

இள வயது முதல் எழுத்து துறையில் ஆர்வம் காட்டி வந்த இவர் 2017ம் ஆண்டு “இரண்டும் ஒன்று” என்ற தனது முதலாவது கவிதை நூலை வெளியிட்டதன் மூலம் இலக்கிய உலகமெங்கும் பெயர் பதித்தது மட்டுமல்லாமல் “புதையல் தேடி” என்ற கவிதை நூலை மிக விரைவில் வெளியிட உள்ளார்.

சமூக அவலம், பெண்ணியம், சர்வதேச பார்வை என்பன இவரது கவிதைகளில் காணக்கூடியதாக இருப்பதோடு தனது எழுத்தாண்மையினால் குறுகிய காலத்தில் மிகப் பெரிய அளவில் பேசக்கூடிய ஒருவராகவும் மாறியுள்ளார்.

தமிழ் மொழி பிரிவில் கவிதை, பாடலாக்கம், நூல் விமர்சனம், சிறுவர் கதை மற்றும் சிறுகதை போன்ற போட்டிகளில் முதலிடம் பெற்றுக்கொண்டார். ஆங்கில மொழி பிரிவில் கவிதை, பாடலாக்கம், நூல் விமர்சனம், சிறுவர் கதை போன்ற போட்டிகளில் முதலிடம் பெற்றுக்கொண்டார்.

-Ibnu Asad

(Thanks Sonakar.com)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.