லிபிய ஆக்கிரமிப்பும் இலங்கை முஸ்லிம்களும்.

உஸ்மானிய பேரசுக்கு எதிராக இத்தாலிய இராணுவம் முன்னெடுத்த யுத்தம் 29 September 1911, முதல் ஒக்டோபர் 18, 1912ம் ஆண்டு வரை வட ஆபிரிக்காவில் இடம்பெற்றது. இதனால் லிபியாவின் திரிப்போலி உட்பட பல நகரங்களை உஸ்மானிய பேரரசு இழந்தது. ஸன்னூஸியா ஆன்மிக அமைப்பை சார்ந்த (தரீக்கா அஸ் ஸன்னூஸிய்யா) உமர் முக்தார் போன்ற தளபதிகள் ஸாவிய்யாக்களில் முகாம்களை அமைத்து ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இத்தாலியின் இந்த ஆக்கிரமிப்பு எதிராக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் 1911ம் ஆண்டு டிசம்பர் 23ம் திகதி சனிக்கிழமை கொழும்பு 10 மருதானை பள்ளிவாசலில் இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கையின் பல பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான முஸ்லிம் உறவுகள் கலந்துகொண்டனர். இந்தப் புகைப்படம் 1911ம் ஆண்டு டிசம்பர் 23ம் திகதி சனிக்கிழமை மருதானை பள்ளிவாசலுக்கு முன்பாக எடுக்கப்பட்டது. ஸ்தான்பூல் நகருக்கான கொன்சியூலர் ஜெனரல் Sir முஹம்மத் மாகான் மாகார் தலைமையில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

Written by :- FazhanNawas

பட உதவி
உஸ்மானிய பேரரசின் ஆவணக்காப்பகம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.