( மினுவாங்கொடை நிருபர் )

   தேர்தல் சட்ட  ஒழுங்கு விதி முறைகளைப் பின்பற்றாத ஊடகங்களுக்கு, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆணைக்குழுவில் நேற்று முன் தினம்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இந்த சிவப்பு எச்சரிக்கையை விடுத்தார்.

   அரச ஊடகங்களுக்கான இறுதி அறிவித்தலாகவும் இது காணப்படும் என்றும் அவர் இதன்போது  சுட்டிக்காட்டியுள்ளார். 
   இதேவேளை, தனியார் ஊடகங்களும்  இயலுமானவரை தேர்தல் சட்ட ஒழுங்கு விதி முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

   தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்ட திட்டங்களைப் பின்பற்றாத ஊடகங்களைத் தவிர்த்து, உரிய முறையில் செயற்படும் நிறுவனங்களுக்கு மாத்திரம் உத்தியோகபூர்வ முடிவுகளை வௌியிட நடவடிக்கைகள்  எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

   இது தவிர,  கடமை நேரத்தில் தேர்தல் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என அரச சேவையாளர்களிடம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

   தேர்தல் காலத்தில் அரச நிறுவனங்களில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் ஆராய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும்  கணக்காய்வாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.