நாட்டைக் கட்டியெழுப்பும் சௌபாக்கியமான நோக்கம் என்ற புதிய அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்திற்கு அமைய அபிவிருத்தி பணிகளை யதார்த்தமாக்க முழு அளவிலான முயற்சியை எடுப்பது அனைத்து அரச நிறுவனங்களின் பிரதானிகளினதும் மற்றும் நிர்வாகத்தினரதும் பொறுப்பு என நிதி பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் அரசாங்கத்தில் தேசிய கொள்கையாக இதனை கருதி அதில் உள்ளடக்கப்பட்டுள்ள நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள அமைச்சுக்கள், திணைக்களங்கள் உள்ளிட்ட அனைத்து அரச நிறுவனங்களினதும் பிரதானிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

நிதி பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்த மாதத்தின் முதல் வாரத்தில் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது.

பயனுள்ள ஒரு குடி மகன், மகிழ்ச்சியாக வாழும் குடும்பம், நல் ஒழுக்கமுள்ள சாதாரண சமூகம் மற்றும் வளமான தேசம் ஆகிய நோக்கங்களை நிறைவேறறிக்கொள்வதே இதன் நோக்கம் என நிதி பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய அமைச்சுக்கள், திணைக்களங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் உள்ளிட்ட அனைத்து அரச நிறுவனங்களும் இந்த கொள்கைக்கமைய செயற்பட வேண்டியது கட்டாயம் எனவும் அந்த அமைச்சு அறிவித்துள்ளது.

2020, 2025 ஆம் வருடங்களில் அமுல்படுத்தப்படும் சகல பொருளாதார வேலைத்திட்டங்களின் கீழ் சாதாரணமாக பொருளாதார வளர்ச்சி வேகம் உள்நாட்டு உற்பத்தியாளர்களில் 6.5 அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்கக்கூடிய வகையிலும் அதேபோல் அமெரிக்க டொலர் 6500 க்கு அதிகரித்த தனிநபர் வருமானத்தை அடையக் கூடிய வகையில் இந்த அரச கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த அரச கொள்கையின் கீழ் தேசிய மற்றும் சர்வதேச உறவுகளின் தேசிய கொள்கையை பத்து கொள்கைகளுக்கமைய முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

வேலையற்றோர் வீதத்தை நான்கு வீதமாக குறைப்பது மற்றும் பண வீக்கத்தை 5 வீதத்திற்கு குறைவாக பேணுவது வரவு செலவு திட்ட துண்டு விழும் தொகையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவீதத்திற்கு குறைவாக தொகைக்கு கொண்டுவருதல் ஆகியன இதன் நோக்கமாகும்.

இந்த புதிய அரச கொள்கை அறிக்கையை திறைசேரியின் இணையத்தளத்தில் மும் மொழிகளிலும் பதிவேற்றப்பட்டுள்ளதுடன் அதேபோல் ஏனைய அனைத்து அரச நிறுவனங்களினதும் இதனை பதிவேற்றுமாறு நிதி பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சு கேட்டுள்ளது.

AdaDerana 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.