இராஜாங்க அமைச்சுப் பொறுப்பை நான் ஏற்காதது தொடர்பில் என்னிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். இன்னும்... இதுவரை... இது தொடர்பில் சிந்தித்துக் கொண்டிருப்பவர்களுக்கு...

இதற்கு முன்னர் நான் கெபினட் அமைச்சராக இருந்தமையால், நான் இராஜாங்க அமைச்சுப் பொறுப்பை நிராகரித்தேன். நாட்டின் அபிவிருத்தியைக் கருதியும், கெபினட் அமைச்சர்களின் தொகை இம்முறை 15 ஆகக் குறைக்கப்பட்டு மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதியின் இந்த முடிவை வரவேற்கின்றேன்.

   கெபினட் அமைச்சரான ஒருவர், அதன்பின்பு இராஜாங்க அமைச்சராவது அவ்வளவு உகந்ததல்ல என நான் கருதுகிறேன். அத்துடன், ஒருவரது தெரிவு தொடர்பில் தனிப்பட்ட முறையில் தீர்மானம் எடுத்திருப்பதை, எவருக்கும் விமர்சனம் செய்ய முடியாது. இப்படிச் செய்வது, அவருக்கு உரித்தான செயலுமல்ல.

   ஆழமாகச் சிந்திக்குமிடத்து, நான் இராஜாங்க அமைச்சுப் பொறுப்பை நிராகரிப்பதற்கு, தனித்தீர்மானமொன்றை எடுத்ததுடன், ஜனாதிபதியின் எண்ணங்களுக்கேற்ப அடுத்தவர்களுக்கும் இராஜாங்க அமைச்சுப் பொறுப்புக்களை வகிக்க இடம் ஒதுக்கிக் கொடுக்க வேண்டும் என்ற நன் நோக்கத்திலேயே இவ்வாறான் முடிவொன்றை எடுத்தேன்.

   எனவே,  இராஜாங்க அமைச்சுப் பதவி வகிக்காதவர்களுக்கு இப்பதவிகளை வழங்கியமை பாராட்டுக்குரியதே. இது நமக்கும், நாட்டுக்கும் சிறந்த சந்தர்ப்பமாகும் என நான் நம்புகின்றேன்.

- பைஸர் முஸ்தபா

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.