A/L fail ஆனவர் பின்னர் கடை வைத்து பணக்காரராகி கம்பனி ஆரம்பித்து 100 பேர் அவருக்குக் கீழே வேலை செய்கிறார்கள்.

A/L fail ஆனவர் ஆட்டோ ஓட்டி, பணம் சேர்த்து இன்னொரு ஆட்டா வாங்கி இப்படி தொடர்ந்து சென்று இப்போது பல வாகனங்கள் வைத்து வாடகைக்கு விடுகிறார்.

A/L fail ஆனவர் வெங்காய வியாபாரம் ஆரம்பித்து வியாபாரம் செய்து இன்று ஊரில் பெரிய பணக்காரராக இருக்கிறார்.

இப்படி ஆயிரம் உதாரணங்களுடன் motivational கட்டுரைகள் வரும்.

எங்கே உங்களைச் சுற்றிப் பாருங்கள்.

உங்களுக்குத் தெரிந்த A/L fail ஆனவர்கள் எத்தனை பேர் வாழ்வில் இவ்வாறு முன்னேறி இருக்கிறார்கள்?

வெளிநாட்டுக்கு office boy ஆகப் போய் இருப்பார்.

இல்லையெனில் கடையொன்றில் கூலி வேலை பார்ப்பவராக இருப்பார்.

சந்தை வியாபாரியாக அல்லது பெட்டிக் கடை நடாத்துபவராக, ஆட்டோ ஓட்டுபவராக, வடைக் கரத்தை வைத்திருப்பவராக, மீன் விற்பவராக.

உலகம் எப்போதும் ஜெயித்தவர்களையே கொண்டாடும். தோற்றவர்களை ஒருபோதும் கண்டு கொள்ளாது.

A/L இல் fail ஆகி பின்னர் மேற்சொன்னவற்றை முயற்சி செய்து ஜெயித்தவர்கள் லட்சத்தில் பத்துப் பேர் இருப்பார்கள். உலகம் அவர்களை தூக்கி வைத்துக் கொண்டாடும். தொடர்ந்து பேசும். உதாரணம் கூறும்.

ஆனால் தோற்றவர்கள் முகவரி தெரியாமலேயே சென்றிருப்பர்.

முஸ்லீம் சமூகம் ஒரு பணம் பார்க்கும் சமூகமாக, வியாபார சமூகமாக இருந்து சாதித்தவை எவை?

"கல்வி என்பது திருட முடியாதது, அழிக்க முடியாதது" என்றெல்லாம் சிறுவயதில் படித்தாலும் பெரியவராகும் போது தட்டிக் கழிக்கிறோம்.

நிச்சயம் கல்வி எங்கும், எந்த நிலையிலும் கை கொடுக்கும்.

A/L இல் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

A/L இல் போதிய தேர்ச்சி அறியாதவர்கள் மீண்டும் முயற்சியுங்கள். இன்னொரு வருடத்தை நீங்கள் செலவழிப்பது ஒருவேளை ஒரு couse க்கு செலவழிக்கப் போகும் உங்கள் தகப்பனின் பல லட்ச ரூபாய்களை சேமிக்கக் கூடும்.

தேர்ச்சி அடையாதவர்கள் மீண்டும் முயற்சி செய்யுங்கள். இரண்டாவது தடவை தோற்ற ஆர்வமில்லை என்றால், இன்று எத்தனேயோ Technical colleges, training courses இருக்கின்றன. முடித்தால் சிறந்த வருமானங்களைப் பெறக்கூடிய பல தொழில்வாய்ப்புக்கள் உள்ளன. அவற்றை எமது முஸ்லீம் சமூகம் பயன்படுத்துவது குறைவு. தெரிந்தவர்கள் வழி காட்டுங்கள்

Course கள் செய்ய நீங்கள் எத்தனித்திருந்தால் தரமான பாடநெறிகளை, தரமான தனியார் கல்வி நிறுவனங்களைத் தெரிவு செய்து கொள்ளுங்கள்.

நீண்டகால தொழில் வழிகாட்டல்கள் வழங்கும் பாடநெறிகளைத் தெரிவு செய்யுங்கள். அதை விடுத்து முட்டைக் கோஸ் போன்ற குறுகிய கால பாடநெறிகளைப் படித்து விட்டு வெளிநாட்டுக்குப் பறக்காதீர்கள்.

அவை காயத்துக்குப் ப்லாஸ்டர் ஒட்டுவது போன்றது. உடனடி நிவாரணங்களைத் தரும். ஆனால் நீண்டகாலத் தீர்வுகளைத் தரப் போவதில்லை.

இப்போதுள்ள இக்கட்டான நிலையிலிருந்து மீள்வதற்கு முஸ்லீம் சமூகத்துக்கு கல்வி கற்பதை விட வேறு எந்தத் தெரிவும் இல்லை.

யாபகமிருக்கட்டும். வரலாற்று நெடுகிலும் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் அனைத்தும் வெறிகொண்டு எழுந்து ராட்சச உருவமெடுத்து நிற்பது "கல்வி கற்றதனால்"தான்.

"யூதர்கள், சீக்கியர்கள், மத்திய கால முஸ்லீங்கள்" என்று வரலாற்று நெடுகிலும் பல உதாரணங்கள் உண்டு.

இலங்கை முஸ்லீங்களின் எழுச்சியும் கல்வி கற்பதிலேயே நிச்சயம் இருக்கும்.

உங்களைச் சுற்றியிருப்போர் தேர்வில் தோல்வியடைந்திருந்தால் கொஞ்சம் தேடிப் பாருங்கள்.

ஒருவேளை பண வசதியின்மையால், ஒழுங்கான வழிகாட்டல் இன்மையால், சரியான வழி தெரியாமையினால், தவறான பாடத்தை தேர்வு செய்ததால் இந்தமுறை தேற்றத் தவறியிருப்பார்கள்.

குறைகளைக் கண்டுபிடித்து தீர்த்து அடுத்த முறை எழுத ஊக்கப் படுத்துங்கள். அல்லது தரமான வேறு பாடநெறிகளைத் தேர்வு செய்து கல்வி கற்க வழிகாட்டுங்கள்.

காலங்கள் கடந்த பின்னர் ஞானம் வருவதில் பிரயோசனமில்லை. இதுவே சிறந்த காலம். பயன்படுத்த வழிகாட்டுங்கள். தவறான உதாரணங்களைக் காட்டி விடாதீர்கள்.

அம்பானி பெற்றோல் அடித்த மோட்டிவேஷனல் கட்டுரைகள் இப்போதைக்கு வேண்டாமே...!!

(Sabith Thaha)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.