முஸ்தஃபா ஸலாமா

அண்மையில் கோலாலம்பூரில் நடந்த முஸ்லிம் நாடுகளின், அறிஞர்களின் மாநாட்டில் சவூதி அரேபியா கலந்துகொள்ளாது தவிர்ந்துகொண்டது.  மாநாட்டின் நிகழ்ச்சி நிரல் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (ஓஐசி) தளத்தின் கீழ் விவாதிக்கப்பட வேண்டும் என்று சவூதி அரேபியா தெரிவித்தது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கலந்துகொள்வதை ரியாத் கடுமையாக  ஊக்கமிழக்கச் செய்து, மாநாட்டில் அவரை கலந்துகொள்ளாமல் செய்தது. மலேசியாவின் பிரதமர் மஹாதீர் முஹம்மத்இ இந்த  மாநாடு முஸ்லிம் உலகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டது என்றும்இ மாறாகஇ ஒரு புதிய முகாமை உருவாக்குவதற்கோ அல்லது ஒற்றுமையின்மையை ஏற்படுத்துவதற்கோ எந்த நோக்கமும் இல்லை என்றும்வலியுறுத்தினார்.

சவூதி ஊடகங்கள் இம்மாநாட்டை இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கான சவாலாகக் காட்டி வந்த நிலையில், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பானது மாநாட்டை மறைமுகமாக விமர்சித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது.

வரலாற்று ரீதியான சட்டபூர்வத்தன்மை
எகிப்தின் அரபு தேசியவாதத்தை சமநிலைப்படுத்த ரியாத் உருவாக்கிய இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு மூலம் சவூதி அரேபியா வரலாற்று ரீதியாக சட்டபூர்வமான தன்மையை அனுபவித்து வருகிறது. மேலும் இது சவூதி அரேபியாவுக்கான மென்மையான சக்தியின் ஆதாரமாக பராமரிக்கப்படுகிறது. முஸ்லிம் உலகில் அதன் நிலை மற்றும் அடையாள தோரணையை எதிர்தரப்புக்கள் மறுக்க முடியாதவாறு இருந்து வருகின்றது.

ஜித்தாவை தலைமையகமாகக் கொண்ட 'முஸ்லிம் உலகின் கூட்டுக் குரல்' என்று தன்னைக் குறிக்கும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு மீது தனது ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ள மட்டுமே, சவூதி அரேபியா ஒற்றுமையைத் தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கிறது. ஏனைய முஸ்லிம் மன்றங்களின் எழுச்சியானது, சவூதி அரேபியாவின் மறைந்து வரும் நியாயத்தன்மையை மட்டுமல்ல, முஸ்லிம் உலகில் சவூதி அரேபியாவின் வீழ்ச்சியடைந்த பங்கையும் எடுத்துக்காட்டுகிறது.
ஆயினும்கூட, உலகளவில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பெரும் பிரச்சினைகளை தீர்க்க இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு தவறிவிட்டது. அதே நேரத்தில் சவூதி அரேபியா பெரும்பாலும் பொருத்தமற்றதாகிவிட்டுள்ளது. சவூதி அரேபியாவானது முஸ்லிம் நலன்களுக்கு எதிராக தீவிரமாக செயல்படுவதாக பார்க்கப்படுகிறது.
சந்தேகத்திற்குரிய குற்றச்சாட்டுகளுக்காக மிதவாத இஸ்லாமிய அறிஞர்களுக்கு மரண தண்டனை விதிப்பது போன்று உள்நாட்டிலும் அது தவறுகளை இழைத்து வருகின்றது. தார்மீக ரீதியாக கேள்விக்குரியது என்று பலர் கருதுகின்ற பொழுதுபோக்கிற்கான பொது அதிகார சபையை முடுக்கிவிட்டதற்காக ஆட்சியை விமர்சித்ததற்காக இன்னும் பலரும் குறிவைக்கப்பட்டுள்ளனர்.

சவூதி அரேபியா வெறுமனே முஸ்லிம் உலகில் அதன் நிலை மற்றும் அதிகாரம் குறித்து கவலைப்படவில்லை. கோலாலம்பூர் மாநாட்டில் கலந்து கொள்வதிலிருந்து தவிர்ந்துகொள்வதற்கும், மற்றவர்களைத் தவிர்ந்துகொள்ளுமாறு தூண்டுவதற்குமான சவூதி அரேபியாவின் தீர்மானமானது, மலேசியாஇ துருக்கி மற்றும் கட்டார் உடனான வெளியுறவுக் கொள்கை மற்றும் அரசியலிலுள்ள அதன் அடிப்படை வேறுபாடுகளிலிருந்து உருவாகிறது.

அரபு வசந்தம்

அரபு வசந்தத்தை ஒரு அச்சுறுத்தலாகப் பார்த்த சவூதி அரேபியா, அரபு வசந்தத்திற்கு எதிராக நின்றது என்பதை நினைவில் கொள்வது அவசியம். 2011 இல் கிழக்கு சவூதி அரேபியாவிலும்இ அண்டை நாடான பஹ்ரைனிலும் எதிர்ப்புக்கள் வெடித்தபோது, ரியாத் அவற்றை கடுமையான சக்தியைப் பிரயோகித்து தடுத்தது. அமைதியை ஏற்படுத்தும் முயற்சியாக சவூதி அரசாங்கம் புதிய வீடுகள் மற்றும் சம்பள உயர்வுகளுக்காக பில்லியன் கணக்கான டொலர்களை செலவிட்டது.

சவூதி அரேபியாவின் சட்டபூர்வத்தன்மையையும், பிராந்திய அந்தஸ்தையும் உயர்த்தும் அரசியல் சீர்திருத்தத்திற்கான கோரிக்கைகளுக்கு இடமளிப்பதற்கு பதிலாகஇ அரபு வசந்தத்தை நசுக்குவதை சவூதி அரேபியா தெரிவு செய்தது.

2013 இல் எகிப்திய இராணுவ சதித்திட்டத்தை உற்சாகப்படுத்திய முதல் நாடு சவூதி அரேபியா ஆகும். அதற்கு ஒரு வருடத்தின் பின்னர், முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது. இங்கு யெமனில் சவூதி அரேபியாவின் போர் அல்லது கட்டார் மீதான சவூதியின் முற்றுகையையும் குறிப்பிட்டாக வேண்டும்.

துருக்கி அரபு வசந்தத்துக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் ஒரு சக்தியாகும். துருக்கியின் உள்நாட்டு அரசியல் குறித்த விமர்சனங்கள் உள்ளபோதும், மக்களின் ஆணை அதற்கு உள்ளது. மலேசியா சமீபத்தில் ஒரு ஊழல் நிறைந்த பிரதமரை நீக்கியது. மேலும், பில்லியன் கணக்கான நிதியை திரும்பப் பெற போராடுகிறது. கட்டார் இன்னும் பாரம்பரிய முடியாட்சி நியாயத்தன்மையை அனுபவித்து வருகிறது. அதே நேரத்தில் மில்லியன் கணக்கான அரேபியர்கள் கட்டாரின் அல் ஜசீரா வலையமைப்பை பார்க்கின்றனர். இந்த மூன்று நாடுகளும் சவூதி அரேபியாவை விட உள்ளாட்சி மற்றும் அரசியல் பிரச்சினைகளை விவாதிக்க மிகவும் தயாராக உள்ளன.

பலஸ்தீன்-இஸ்ரேலிய மோதலைக் கையாள்வதிலும் வேறுபாடு உள்ளது. சவூதி அரேபியா எப்போதாவது பலஸ்தீன உரிமைகளைப் பற்றி பேசுகிறது. ஆனால் நடைமுறையில் பலஸ்தீன விவகாரத்தை அது கைவிட்டுவிட்டுள்ளது. அதே நேரத்தில் இஸ்ரேலுடன் படிப்படியாக நெருங்கி வருகின்றது.

சவூதி பிரஜைகள் மற்றும் ஊடகவியலாளர்கள் பலஸ்தீனர்களை ஏமாற்றுவதற்கு ஊக்குவிக்கப்படுகின்றனர் என்று இல்லாவிட்டாலும், அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு ஒரு சவூதி வலைப்பதிவர் இஸ்ரேலுக்குச் சென்று அதிகாரிகளைச் சந்தித்தார். பின்னர் இரண்டு இஸ்ரேலிய ஆட்களை அவரது இல்லத்தில் வரவேற்றார். இவை அனைத்தும் சில ஆண்டுகளுக்கு முன் கற்பனை செய்ய முடியாத நகர்வுகளாக இருந்தன. இந்த முன்னேற்றங்களாவன, 2002 ஆம் ஆண்டின் சவூதி தலைமையிலான சமாதான முயற்சிக்கு முரணானவை. அந்த சமாதான முயற்சியானது 1967 ஆம் ஆண்டு முதல் மேற்குக் கரை மற்றும் காசாவில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து இஸ்ரேல் முழுவதுமாக பின்வாங்க வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தது.

இதேநேரம், மலேசியாவும் துருக்கியும் இஸ்ரேலை கடுமையாக கண்டித்துள்ளன. கோலாலம்பூர் மாநாடு ஜெருசலமில் அமைந்துள்ள அல்-அக்ஸா பள்ளிவாசலை விடுவிப்பது குறித்தும் பேசியிருந்தது.

சவூதி அரேபியா உண்மையில் சர்வதேச முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதில்லை. 2017 ஆம் ஆண்டில் ரோஹிங்யர்களுக்கு எதிரான மியான்மரின் அட்டூழியங்களை அது கண்டித்தாலும், பின்னர் சில ரோஹிங்யர்களை பங்களாதேஷுக்கு நாடு கடத்தியது. ஆனால்இ இவர்களை நாடுகடத்த வேண்டாம் என்றும்இ அகதி அந்தஸ்த்து வழங்குமாறும் ஐ.நா. கோரியிருந்தது.

சவூதி அரேபியா காஷ்மீருக்கு ஆதரவான ஒரு நிலைப்பாட்டை எடுக்கவில்லை. அது மட்டுமன்றிஇ அடக்குமுறைக்குட்படும் உய்குர் முஸ்லிம்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. மாறாகஇ சீனாவின் கொள்கைகளை ஆதரித்து ஐ.நா. சபைக்கு ஒரு கடிதத்தை அனுப்பியது.

சவூதி அரேபியா ஒரு சர்வாதிகார அரசியலால் தூண்டப்படுகின்றது. முஸ்லிம் ஒற்றுமையை குறைவாகவே பொருட்படுத்துகின்றது. இனி சவூதி அரேபியாவுக்கு முஸ்லிம் உலகில் அதே உயர் நிலை இருக்கப்போவதில்லை. ஆனால் கோலாலம்பூர் மாநாட்டைத் தவிர்ப்பதற்கு அணுசக்தி திறன் கொண்ட ஒரு பெரிய நாடான பாகிஸ்தானை கட்டாயப்படுத்தும் அளவுக்கு அது இன்னும் வலுவாக உள்ளது.

ஆயினும்கூட, இதைப் பொருட்படுத்தாமல் மாநாடு நடைபெற்றது.  இனி, முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பற்றி விவாதிப்பதைத் தவிர, இந்நாடுகள் நாடுகள் நிலையான உறுதியான மற்றும் மதிப்பீடு செய்யக்கூடிய தீர்வுகளையும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.