இன்று தொடக்கம் எதிர்வரும் 46 நாட்களின் பின்னர் பாராளுமன்றை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடைக்கும் என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி அலுவலகத்தில் இன்று (13) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

இன்றிலிருந்த சரியாக 46 நாட்களின் பின்னர் உதயமாகும் நாளின் நள்ளிரவு 12 மணிக்கு பாராளுமன்றை கலைக்கக்கூடிய அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடைக்கும்.

46 நாட்களின் பின்னர் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் எதிர்வரும் பொதுத் தேர்தலை இன்றிலிருந்து சரியாக 100 நாட்களில் நடத்தக்கூடிய வாய்ப்பு கிடைக்கும் என்றார்.

AdaDerana 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.