உயர் தரம் தோற்றிய மாணவர்களுக்கான what's Next? என்ற தொனிப் பொருளில்  தொழிற் பயிற்சி வழிகாட்டல் நிகழ்ச்சி நேற்று (12) The Young Friends அமைப்பினால் பொல்கொல்லை NICD வளாக கேட்போர் கூடத்தில்  காலை 8.4- 4.00 மணி வரை நடைபெற்றது. கண்டிப் பிரதேசத்தை மையப்படித்திய மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

ஆரம்ப நிகழ்ச்சியாக ஊக்கப்படுத்தல், இலக்கை அடைத்தல் தொடர்பாக Fazir Mohideen நடாத்தினார்.

இலங்கை தளத்தில் எத்தகைய தொழில் துறைகள் காணப்படுகின்றன, அதற்கான சந்தை வேண்டுகோள் எத்தகையது, அதற்காக எத்தகை கற்கை நெறிகள் காணப்படுகின்றன என்பன தொடர்பாக அரச அங்கீகாரம் பெற்ற #தொழில்_வழிகாட்டுனர் Zuhair A Cader விளக்கப்படுத்தினார்.

இலங்கையைச் சேர்ந்த கேம்ரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானி Mr.Haleemdeen இந் நிகழ்வில் கலந்து கொண்டதோடு, MA, PhD கற்கை மேற்கொள்பவர்களுக்கான விஷேட  வழிகாட்டல் விரிவுரை மேற்கொண்டார்.

இறுதியாக, மாணவர்களை அவர்கள் விருப்புக்கு அமைய தெரிவு செய்த துறைகளுக்கு அமைவாக பிரித்து, அந்த துறை சார்ந்தவர்களினால் வழிகாட்டலகளும் தெளிவுகளும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வை வெற்றிகரமாக நடாத்த நிதி மற்றும், உடல் உழைப்புகளை வழங்கியவர்களுக்கு TYF செயற்குழு உறுப்பினர்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.

The Young Friend
ஊடகப் பிரிவு
A Raheem Akbar
2020/01/13










கருத்துரையிடுக

Blogger இயக்குவது.