எம்.சி.சி ஒப்பந்தத்தை இன்று கைசாத்திட்டாலும்  தான் மகிழ்ச்சியடைவேன் எனத் ​தெரிவிக்கும் முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, அந்த ஒப்பந்தத்தால் ஒரு மாத்திரை அளவுக்கூட இலங்கையின் சுயாதீன தன்மைக்கு பாதிப்பு ஏற்படாதெனவும் தெரிவித்தார்.
மாத்தறையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து​கொண்டு மேலும் கருத்துரைத்த அவர், 
பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ இந்தியாவில் கடன் சலுகை கோரியதால் வேறு  எந்த நாடும் இலங்கைக்கு சிறிய வட்டிக்கு கடன் தர முன்வராத நிலைமை காணப்படுவதாகவும்,  இதுவரை இலங்கையிலுள்ள எந்தவொரு நிதி அமைச்சரும் வெ ளிநாடுகளிடம் அவ்வாறதொரு கோரிக்கையை முன்வைக்கவில்லை என்றும் தெரிவித்தார். 
அதேபோல் மறுதிசையில்,   அரச ஊழியர்கள் சம்பளத்தை 10 ஆயிரம் ரூபாயால் நல்லாட்சி அரசாங்கம் அதிகரித்ததென தெரிவித்த அவர்,  கடந்த ஜனாதிபதி தேர்தலில் வரிசையாகச் சென்று புதிய அரசாங்கத்துக்கு வாக்களித்த ஆசிரியர்களை அடித்து விரட்டும் நிலைக்கும் அரசாங்கம் ஆளாகியுள்ளதெனவும் தெரிவித்தார். 
அதேபோல் நல்லாட்சி அரசாங்கம் ,எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரையில் அவசியமாக நிதியை ஒதுக்கீடு செய்தே இடைக்கால கணக்கு அறிக்கையை சமர்பித்திருந்தாகவும் தெரிவித்த அவர், புதிய அரசாங்கம் மக்களை ஏமாற்றும் வகையிலான வரிச்சலுகைகளை அறிவித்து அரசாங்கத்திடம் நிதி இல்லை என்கிறது என்றும் சாடினார். 
எவ்வாறாயினும் பொய்களை மாத்திரமே கூறி ஆட்சியை கைபற்றிய அரசாங்கத்துக்கு மக்க​ள் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாத நிலைமையில் வரும் அடக்குமுறையே பிரயோகிக்கபடுமென தெரிவித்த அவர், முதல் தடவையாக ராஜபக்‌ஷர்கள் பிறந்த பூமியிலேயே உள்நாட்டு கிரிக்கெட்  ​ரசிகர்களும் அடித்து விரப்பட்டபடுகிறார்கள் என்றார். 
அத்தோடு, இன்று வீதிப்போக்குவரத்தை சீர்படுத்தும் நோக்கில் அதனை முப்டையினரை களமிறக்கியுள்ளதாக தெரிவித்த அவர், எம்.சி.சி ஒப்பந்தம் மூலம் நாட்டின் போக்குவரத்து விதிமுறைகளை ஒழுங்குபடுத்தும் நோக்கிலேயே கைசாத்திடப்பட இருந்தாகவும் தெரிவித்தார். 
எவ்வாறாயினும், எம்.சி.சி ஒப்பந்தத்தை கைசாத்திட்டால் இன்றும் தான் மகிழ்ச்சியடைவேன் எனத்​ தெரிவித்த அவர், அதனால் ஒரு மாத்திரை அளவுக்கூட இலங்கையின் சுயாதீன தன்மைக்கு பாதிப்பு ஏற்படாதெனவும் தெரிவித்தார். 
TamilMirror

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.