கலைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகின்றது.

கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை குறித்து ஆராய்வதற்காகவே இந்த நடவடிக்கையை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை ஏப்ரல் 30ஆம் திகதி பின்னர் இடைக்கால கணக்குகள் நிறைவடைந்த பின்னர் அரசாங்க செலவுகளுக்கு பணம் ஒதுக்கிக் கொள்ள வாய்ப்பு இல்லாமை, வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை காரணமாக மேலும் 3 மாதங்களுக்கு தேர்தல் நடத்துவதற்கு வாய்ப்புகள் இல்லாமை மற்றும் பொதுத்தேர்தலை தேர்தல் ஆணைக்குழுவினால் பிற்போட முடியும் என்பதனால் நாடாளுமன்றத்தை கூட்ட வாய்ப்புகள் உள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.