(றிஸ்வான் சாலிஹூ)

கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்குச் சட்டம் காரணமாக அக்கரைப்பற்று மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வியாபார நிலையங்கள் இன்று (21) மூடப்பட்ட நிலையில் காணப்படுகிறது.

நகரத்தின் பிரதான மற்றும் உள்ளக பாதைகளில் வாகனங்கள் மற்றும் ஆள் நடமாட்டம் இல்லாத காரணத்தினால் பாதைகள் வெறிச்சோடி காணப்படுவதனையும் அவதானிக்க முடிகின்றது.

அத்தியாவசிய தேவைகளுடைய சில அரச நிறுவனங்கள் இயங்கு நிலையில் காணப்படுவதுடன் பாதுகாப்பு பிரிவினர் வீதிகளில் கடமையில் ஈடுபடுவதை அவதானிக்க கூடியதாக உள்ளது.

நேற்று (20) மாலை 6.00மணிக்கு ஆரம்பமான இந்த ஊடரங்கு சட்டம் திங்கட்கிழமை (23) காலை 6.00மணி வரை அமுலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துரையிடுக

Blogger இயக்குவது.