ஊரடங்கு உத்தரவின் போது இலங்கை துறைமுகங்களுக்குள் நுழையும் அனைத்து கப்பல்களுக்கும் நுழைவு மற்றும் தாமதக் கட்டணங்கள் விலக்களிக்கப்படும் என இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றை வௌியிட்டு ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, அனைத்து கப்பல்களுக்குமான நுழைவு மற்றும் தாமத கட்டணத்திற்கு விலக்களிக்கப்பட்டுள்ளதாக துறைமுக அதிகார சபையின் தலைவர் தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கு குறித்த வணிக சமூகத்திற்கு தேவையான நிவாரணங்களை துறைமுக வளாகத்திலேயே பெற்றுக் கொடுக்க இதன் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.