பாம்பு பல்லி வௌவால்
உண்டு வந்த வைரஸா நீ
கோவிட் 19, கோரக் கொரோனா!
சீனாவில் வந்தது வீனா
இது விதியா சதியா  சொல்!

முழு உலகையே உலுக்கிய
கோரக் கொரோனாவே
இளையோர் முதல் முதியோர்
இன மத மொழி ஜாதி பேதமற்று
உன் நாமம் உச்சரிப்பு!
இதில் ஒரே நச்சரிப்பு!

எங்கும் மரண ஓலம் போல்
மயானமாய்க் காட்சி
உலகையே ஆட்டிப் படைக்கும்
கோரக் கொரோனாவே
சமாதானம் உதயம் செய்திட வந்த
வித்துவா நீ கொரோனா!

மரணத்திற்கு மருந்துமில்லை
கொரோனாவுக்கும் மருந்தில்லை
ஆக, கொரோனா நீ
மரணத்தின் மறு வடிவமா!

கொரோனா......
வெற்றுக் கண்களில் படாத
உனை உலகே நம்புகின்றது!
கொரோனாவை நம்புபவனே
இறைவனை நம்ப மறுப்பதேனோ!
இறைவன் தன் ஆதிக்கம் காட்ட
அவன் உண்டென்று போதிக்க
உலகிற்கு அனுப்பிய துகளா நீ !

வீண் பேச்சுக்கள் இல்லை
கூடிக் களியாட்டம் இல்லை
வீண் கொண்டாட்டம் இல்லை
கை குலுக்கல் இல்லை
ஆசை முத்தம் இல்லை
அரவணைப்பும் இல்லை
அவஸ்தையும் இல்லை!

கழுவு கழுவு கை கழுவு
நழுவு கழுவு சனத்திரளை விட்டு!
மனிதா......
உன் உறுப்புக்கள் தான் என்றாலும்
உனக்கும் இல்லை அனுமதி
உன் விருப்பம் போல் தொட!
நிலமை இப்படி இருக்க
மனிதா நீ எத்தனை உயிர்களை
உடல்களை அவர்களது உடமைகளை
ஊடுருவல் செய்தாய் தீண்டல் செய்தாய்!
கொரோனா வந்தது
கெடுதி என்றாலும்
படிப்பினைகள் பல தந்தது!!
படித்தே பயன் பெறுவீர்!
முற்பகல் செய்யின் பிற்பகல்.....

எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா
பஸ்யால

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.