நவீன மருத்துவத் துறைக்கு சவால் விடுத்துக்கொண்டு உலகையே ஆட்டம்காண வைத்துக்கொண்டிருக்கும் கொரோனா வைரசினால் சீனர்கள் மரணித்துக் கொண்டிருந்தபோது உலகிலிருந்து சீனா தனிமைப்படுத்தப்பட்டது.

செல்லும் இடமெல்லாம் சீனர்கள் துரத்தப்பட்டார்கள். சீனாவுக்கான விமானப்பயனங்களை உலக நாடுகள் நிறுத்தியது.

அதன்பின்பு ஈரான், தென்கொரியா, ஐரோப்பா, அமெரிக்கா உற்பட உலகமெங்கும் பரவியபின்புதான் அதன் விபரீதத்தையும், தாக்கத்தையும் ஏனைய உலக நாடுகள் உணரத் தொடங்கியது.

இந்த வைரசானது சீனர்களின் உணவு முறையிலிருந்துதான் பரவியதாக ஆரம்பத்தில் கூறப்பட்டு வந்தது. பின்பு இது திட்டமிட்டு பரப்பப்பட்ட உயிரியல் ஆயுதம் என்று முதன் முதலில் இஸ்ரேலிய விஞ்ஜானியினால் சந்தேகம் தெரிவிக்கப்பட்டது.

அதுபோல் இந்த வைரசை அமெரிக்காதான் திட்டமிட்டு பரப்பியது என்று ஈரானிய ஆத்மீகத் தலைவர் இமாம் அலி கொமைனி அவர்கள் அண்மையில் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
ஆனால் இதில் அதிகமாக பாதிக்கப்பட்ட சீனா எவர்மீதும் விரல் நீட்டி உத்தியோகபூர்வமாக இதுவரையில் குற்றம்சாட்டவில்லை.

தற்போது சீனா இந்த வைரசை பூரண கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்ததுடன், அதன் வூஹான் மாகனம் வழமைக்கு திரும்பியுள்ளதானது ஏனைய நாடுகளுக்கு ஆறுதலை தருகின்றது.

சீனாவுக்கு அடுத்தபடியாக ஈரானில் அதிகமானவர்கள் இந்த வைரசின் தாக்கத்துக்குள்ளானதாகவும், பத்து நிமிடங்களுக்கு ஒருவர் என்றரீதியில் மரணிப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனால் ஐரோப்பா பக்கமே சர்வதேச ஊடகங்கள் கவனம் செலுத்துகின்றது. 

கொரோனா வைரசின் தாக்கத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளான சீனாவும், ஈரானும் அமெரிக்காவின் எதிரி நாடுகள் என்பது கவனிக்க வேண்டிய விடயமாகும்.

பல வருடங்களாக ஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடை விதித்திருக்கின்ற சூழ்நிலையில் கொரோனா வைரசின் தாக்கத்தினால் அது இன்னமும் ஈரானை பாதிப்படைய செய்துள்ளது.

வைரசின் தாக்கத்தினாலேயே சீனா தனிமைப்படுத்தப்பட்டது. ஆனால் அமெரிக்காவின் அரசியல் பொருளாதார நலனுக்காக நீண்டகாலமாக ஈரான் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இந்த வைரசின் தாக்கத்தினை எதிர்கொண்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் ஈரான்மீது விதிக்கப்பட்டிருக்கும் அமெரிக்காவின் பொருளாதார தடையினை தளர்த்துமாறு பல உலக நாடுகள் அமெரிக்காவுக்கு அழுத்தம் தெரிவித்திருப்பதுடன், சர்வதேச நாணய நிதியமும், சர்வதேச சுகாதார ஒன்றியமும் ஈரானுக்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளது.

அவ்வாறிருந்தும் ஒரு மனிதாபிமானம் இல்லாமல் அமெரிக்க ஊடகங்கள் ஈரான் பற்றிய தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றது.

அதாவது பல ஆயிரக்கணக்கான ஈரானியர்கள் கொரோனா வைரசின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு மரணித்துள்ளார்கள் என்றும், அவர்களை பராமரிக்க முடியாத நிலையில் பாரிய புதைகுழிகளில் அவர்கள் நாளாந்தம் புதைக்கப்பட்டு வருகின்றார்கள் என்றும் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகினார்கள்.   

ஈரானிய ஆத்மீக தலைவர் கூறுவதுபோன்று அமெரிக்காவினால் பரப்பப்பட்ட உயிரியல் ஆயுதம்தான் இந்த கொரோனா வைரஸ் என்றால் உலகுக்கு இதனை பரப்பிய அமெரிக்காவையும் அது விட்டுவைக்கவில்லை.

ஏனைய  நாடுகளைப்போலல்லாது ஈரானிலிருந்து உண்மை நிலவரத்தை அறிந்துகொள்வது கடினம் என்பதனால் மேற்கத்தேய ஊடகங்கள் கூறுகின்ற செய்திகள்தான் மக்களிடம் தாக்கத்தை செலுத்துகிறது. இது கவலைக்குரிய விடயமாகும்.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.