Hanta Virus ஒரு மனிதரில் இருந்து இன்னும் ஒரு மனிதருக்கு தொற்ற கூடிய நோய் அல்ல

Rihmy Hakeem
By -
0
#HantaVirus



சீனாவில் ஒரு நோயாளி ஹன்ட்டா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மரணித்தது பல மீடியாக்களில் பேசப்பட்டு வருகிறது. Covid19 போதாதற்கு இன்னொன்றா என்று பலரும் பதறுவது போல தெரிகிறது.

1. கொவிட்19 போல இது ஒன்றும் புதிய நோய் நிலைமை அல்ல.

2. இது எங்கும் வேகமாக பரவுவதாக அறியப்படவில்லை.

3. இது ஒரு மனிதரில் இருந்து இன்னும் ஒரு மனிதருக்கு தொற்ற கூடிய நோய் அல்ல.

4. இந்த மாதத்தில் சீனாவில் மட்டுமல்லாமல், உங்களது ஊரில்கூட கொவிட்19 தவிர்ந்த வேறு காரணங்களால் மரணங்கள் ஏற்பட்டு இருக்கும். இதுவும் அது போன்ற ஒன்றே.

யாரோ ஓரிருவர் தமக்கு லைக், ஷெயார் பெற்றுக்கொள்வதற்காக பகிரும் தகவல்களுக்காக பதறவேண்டிய அவசியம் இல்லை.

Dr.Husni Jabir


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)