*கஹட்டோவிட்ட அல் பத்றியா மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற 2014 O/L BATCH இனரின் முயற்சியில்  தமது வகுப்பினரால் தயாரிக்கப்பட்ட முககவசங்களை அதாவது (FACE MASKS) நாளைய தினம் காலை 6 மணிமுதல் கஹட்டோவிட்ட பிரதான  பஸ் தரிப்பிடத்திற்கு அருகாமையிலும் ஓகொடபொல MUHAMMAD NAANA கடை முச்சந்தியிலும் இலவசமாக வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


எனவே ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பின் நிட்டம்புவ போன்ற நகரங்களுக்கு செல்லும் போதோ பொருட்கள் கொள்வனவு செய்ய கடைகள் சுப்பர் மாக்கட் சதோச போன்ற கடைத்தொகுதிகளுக்கு செல்லும் போதோ தவறாமல் முகமூடிகளை வாங்கி அணிந்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

நாளை தினம் முகமூடி அல்லது மாஸ்க் அணியாமல் செல்பவர்களையும் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களை வாகனங்களில் ஏற்றி செல்பவர்களையும் குழுமாமாக பொருட்கள் வாங்கும் போதும் பொலிஸார் தலையிட்டு எச்சரிக்கை செய்யவும் சட்டதிட்டங்களை மீறுபவர்களை கைதுசெய்யவும் பொலிஸாரால் பொதுமக்களுக்கு பாதுகாப்பு தொடர்பான சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.இவற்றை கண்டிப்பாக பேணி முஸ்லிம்களின் நற்பேறுக்கு ஈறுவிளைவிக்காது நாகரீகத்துடனும் சுகாதார ஆலோசனைகளை பேணி நடக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

சகல மருந்தகங்களிலும் முக மூடிகளுக்கான தட்டுப்பாடு காணப்படும் இச்சந்தர்ப்பத்தில் கஹட்டோவிட்ட அல் பத்றியா மகா வித்தியாலய க.பொ.த சாதாரண தர 2014 வகுப்பினரின் இம்முயற்சி காலத்தில் தேவையினை உணர்ந்து செய்த மக்களின் பாதுகாப்பினை கருத்திற் கொண்டு இலவசமாக தயாரித்து வழங்கும் இம்முயற்சி மகத்தானது மாத்திரமன்றி அடுத்தவர்களுக்கும் முண்ணுதாரணம் மிக்க அறப்பணி என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

காலத்தின் தேவையுணர்ந்து செய்த இந்த அரும்பணியை செய்ய முன்வந்தமையையிட்டு குறித்த வகுப்பினருக்கும் இந்த ஏற்பாட்டை செய்த நல்லுள்ளம் படைத்த வாலிபர்களுக்கும் கஹட்டோவிட்ட வாழ் ஊர்மக்கள் சார்பில் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

J.F.Safiya

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.