(Akeel Shihab)

கொடிய கொரோனா நோயிலிருந்து இலங்கை நாட்டு மக்களை பாதுகாக்கும் முகமாக இந்நாட்டு அரசினால் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தினால் அன்றாடம் கூலி தொழில் செய்யும் ஏழை குடும்பங்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளன.

அந்த அடிப்படையில் சம்மாந்துறை மண்ணில் பல சமூக சேவைகளை ஆற்றிவரும் சம்மாந்துறை சமூக நல மேம்பாட்டு ஒன்றியத்தினால் (SWUA) சம்மாந்துறை பிரதேசத்தில் வறுமை கோட்டின் கீழ் வாழும் தெரிவு செய்யப்பட்ட குறித்த 250 குடும்பங்களுக்கு ரூ. 2000 பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் அமைப்பினால் நேற்று (23) வழங்கி வைக்கப்பட்டன.

அமைப்பின் தலைவர் ஏ.எல் நாஸர் அவர்களின் முயற்சியின் காரணமாக குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதுடன் குறித்த உலர் உணவுப்பொதிகளை பெற்றுக்கொண்ட ஏழை குடும்பங்கள் அமைப்பிற்கு தங்களது நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டன. மேலும் குறித்த திட்டத்திற்கு அமைப்பின் அனைத்து அங்கத்தவர்களும் பூரண ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.








கருத்துரையிடுக

Blogger இயக்குவது.