அரசாங்கத்தினால் குறைந்த வருமானம் பெறுவோருக்காக வழங்கப்படும் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு விசேட தேவைகளையுடைய ஒரு லட்சத்து நான்காயித்து 595 பேருக்கும் வழங்கப்படவுள்ளது.
இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
திரு பெஸில் ராஜபக்ஷ தலைமையிலான ஜனாதிபதி செயலணியின தீர்மானத்திற்கமைய சமுர்த்தி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள 5,000 ரூபா கடன்தொகை முழுமையாக உதவித்தொகையாக வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய 21 இலட்சத்து 26 ஆயிரத்து 826 குடும்பங்களுக்கு 10,634 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளன.
இதேபோன்று ஒரு இலட்கத்து 4 ஆயிரத்து 595 ஊனமுற்றவர்களுக்காக 522.9 மில்லியன் ரூபாவும், 38,083 சிறுநீரக நோயாளர்களுக்காக 180 மில்லியன் ரூபாவும் வழங்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
இதேபோன்று ஒரு இலட்கத்து 4 ஆயிரத்து 595 ஊனமுற்றவர்களுக்காக 522.9 மில்லியன் ரூபாவும், 38,083 சிறுநீரக நோயாளர்களுக்காக 180 மில்லியன் ரூபாவும் வழங்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
5 இலட்சத்து 62ஆயிரத்து 977 முதியவர்களுக்காக தலா 5ஆயிரம் ரூபா கொடுப்பனவாக 2814 மில்லியன் ரூபாய செலுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
தனிமைப்படுத்தல் நடவடிக்கைளுக்கு உள்வாங்கப்படுபவர்களும் , தொற்றுக்குள்ளனாவர்களும், இந்த வைரசு தொற்றை வேண்டுமென்று இதனை விலை கொடுத்து வாங்கியவர்கள் அல்லர். சில வேளைகளில் அவர்களுடைய தவறும் இதற்கு காரணமாக அமைந்திருக்கலாம் என்று சுடடிக்காட்டிய சுகாதார அமைச்சர் நாளைய தினம் நானோ நீங்களோ இத்தொற்றுக்கு உள்ளாகலாம். இதனால் தனிமைப்படுத்தல் முகாம்களிலிருந்து வருபவர்களையும் தொற்றுக்குள்ளாகி குணமடைந்து வருபவர்களையும் தனிமைப்படுத்தலில் ஈடுபடுபவர்களையும் கௌரத்துடன் மதிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
கொவிட் 19 தொற்றை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்தியநிலையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)
கருத்துகள்
கருத்துரையிடுக