(நுஸ்கி முக்தார்)
கொவிட் 19 மருத்துவ பணியில் அருஞ் சேவை புரிந்துவரும் மருத்துவர்கள், சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கான பாதுகாப்பு ஆடைகள் மற்றும் முகக்கவசங்கள் என்பவற்றை ரம்யலங்கா நிறுவனம் நாடளாவிய ரீதியில் வழங்கி வருகின்றது.
அதற்கமைய, அனுராதபுரம் போதனா வைத்தியசாலயின் கொவிட் மத்திய நிலையத்திற்கான மேற்படி ஒரு தொகை பொருட்கள் ரம்யலங்கா அமைப்பின் தலைவர் சட்டத்தரணி பாரிஸ் ஸாலி அவர்களின் தலைமையில் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட ரம்ய லங்கா அமைப்பாளர் எச். அஜ்மல் அவர்களும் கலந்து கொண்டார்.
ரம்ய லங்கா நிறுவனத்தினால் இது வரை 11 மாவட்டங்களில் 03 சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகங்கள் அடங்கலாக 27 வைத்தியசாலைகளுக்கு சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இவ்வகை பாதுகாப்பு ஆடைகள் நாடளாவிய ரீதியில் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.