இலங்கையின் மேற்குப் கரையோரத்தில் உள்ள "சிலாபம்" என்ற நகரின் பௌத்தாலோக மாவத்தை என்ற வீதியில் Mosque Gardenல் அமைந்து இந்த அடக்கஸ்தலங்கள் இலங்கையின் சுதந்திரத்திற்காக போராடிய இரண்டு வீரர்களின் அடக்கஸ்தலமாகும்.

போர்த்துக்கேயரை விரட்டியடிப்பதற்காக இலங்கையின் மாயாதுன்னை மன்னரின் அழைப்பில் இலங்கை வந்து போராடிய குஞ்சாலி மரிக்கார்களின் அடக்கஸ்தலங்களே இவை.

 போர்த்துங்கேயரின் வருகையைத் தொடர்ந்து வர்த்தக சமூகமாக இருந்த தமிழ் முஸ்லிம்களும், மாப்பிள்ளா முஸ்லிம்களும் ( கேரள முஸ்லிம்களும்) எதிர்பாராதவிதமாக போர்த்துக்கேயரால் சூறையாடப்பட்டார்கள்.

இந்து சமுத்திரத்தின் 75% வர்த்தக ஆதிகத்தை வைத்திருந்த  தமிழ் முஸ்லிம்களும், மாப்பிள்ளை முஸ்லிம்களும் தமது கடல் வர்த்தக ஆதிக்கத்தை இழந்தார்கள். அவர்களுக்குச் சொந்தமான பெரும்பாலான கப்பல்களை போர்த்துக்கேயர் பலவந்தமாகக் கைப்பற்றினார்கள்.

 கரையோர நகரங்களில் இருந்து வெளியேற்றப்பட்டதோடு, நூற்றாண்டு காலமாக இருந்துவந்த சொத்துக்களும் போர்த்துக்கேயர் வசமானது.    இதே காலப்பகுதியில் கேரளாவின் துறைமுக நகரான கோழிக்கோட் பகுதி சாமூத்திரியர்கள் அல்லது சமோரின் மன்னரின் ஆட்சியில் இருந்தது.

சாமோரின் ஆட்சியார்களின் கடற்படைத் தளபதிகளாக  ''குஞ்சாலி மாரிக்கார்''கள் பணியாற்றினார்.  குஞ்சாலி மரிக்கார்கள் சிறந்த மாலுமிகளாகவும், கடற்படைத்தளபதிகளவும் இருந்தார்கள். இந்து சமுத்திரத்தின் நிர்வாகம் குஞ்சாலி மரிக்களின் கீழ் இருந்தது. இந்து சமுத்திரத்தில் கடற்படை பாதுகாப்பு முறைமையை (Naval Defence system)முதலில் அறிமுகம் செய்த பெருமை குஞ்ஞாலி மரிக்கார்களையே சாரும். போர்த்துக்கேயருக்கு எதிராக கடற்போரில் ஈடுபட்டவர்களும் இவர்களேயாவர். 

குஞ்சாலி மரிக்காரில் நான்கு பேர் முக்கியமானவர்கள். இவர்கள் நான்கு பேரும் காதிரி சூபி ஆன்மீக அமைப்பைச் சேர்ந்தர்கள். இதில் மூன்றாவது குஞ்சாலிமரிக்கார் என்று அழைக்கப்பட்ட  பாட்டு குஞ்சாலி போரத்துக்கேயரை பல தடவைகள் விரட்டியடித்தவரவார். இந்தக் காலப்பகுதியில் நாகூர் மீரான் ஸாஹிப் என்று அழைக்கப்படும் செய்ஹ் ஷாஹூல் ஹமீத் (றஹ்) அவர்களுடன்; மூன்றாவது குஞ்சாலிமரிக்கார் - பாட்டு குஞ்சாலி நெருங்கிய உறவை பேணிவந்தார்கள். செய்ஹ் ஷாஹூல் ஹமீத் அவர்களின் உத்தரவின் பேரிலேயே
"குஞ்சாலி மரிக்கார் –பாட்டுக் குஞ்சாலி" போர்த்துக்கேயருக்கு எதிரான யுத்தங்களை மேற்கொண்டார் என்று வரலாற்று ஆசிரியர் Ronald E. Miller  அவர்கள்  Mappila Muslims of Kerala என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார்கள்.

 குஞ்சாலிமரிக்காரின் படையில் நாகூர் மீரான் ஸாஹிப் (றஹ்) அவர்களின் 404 மாணவர்கள் (முரீதுகள்) இருந்தார்கள். இந்தக் குழுவுக்கு நாகூர் மீரான் ஸாஹிப் (றஹ்)அவர்களின் கலீபாவான காயல்பட்டணத்தைச் சேர்ந்த "செய்ஹ் ஸதக் மரிக்கார்" அவர்கள் தலைமை தாங்கி போர்த்துக்கேயருக்கு எதிரான பல கப்பல்களை தீயிட்டு கொழுத்தியதோடு, ஏனைய கப்பல்களை கைப்பற்றினார்கள்.

இலங்கையின் அப்போதைய சித்தாவக்க ராஜ்யத்தின் மன்னராக இருந்த மாயாதுன்னையின் அழைப்பை ஏற்று  நாகூர் மீரான் ஸாஹிப் (றஹ்) அவர்களின் 3 மாணவர்களான
(3கடற்படைத் தளபதிகளான)
1.குஞ்சாலிமரிக்கார் எனப்படும் பாட்டுக் குஞ்சாலி
2.பச்சிமரிக்கார்,
3.அலி இப்றாஹீம்
ஆகியோர்  இலங்கையின்
"சிலாபம்" என்ற நகருக்கு வந்து இலங்கை மக்களோடு இணைந்து போர்த்துக்கேயரைத் தோற்கடித்தார்கள் என்று இலங்கையின் வரலாற்று ஆசிரியர் டிக்கிரி அபேசிங்ஹ அவர்கள்  Portuguese rule in Ceylon  என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார்கள்.

இதில் வரும் பச்சமரிக்காரின் பெயர்தாங்கிய கல்வெட்டொன்று "மல்வானை அல்முபராக் தேசிய பாடசாலை" மைதான வளவில் வைக்கப்பட்டிருந்தது.  (இந்த கல்வெட்டை பாதுகாப்பது அவசியம்;  இது இலங்கை முஸ்லம்களின் ஐநூறு வருட வரலாறாகும்)

அந்தக் கல்வெட்டில் சீதவக்கை இராஜ்ஜியம் சார்பாக போர்த்துக்கேயருக்கு எதிராக போராடியவர் பச்சிமரிக்கார் ஆவார் என்றும் தமிழில் பொறிக்கப்பட்டுள்ளது.

குஞ்சாலி மரிக்கார் அவிசாவெலயில் உள்ள நாபாவெல முஸ்லிம் கிராமத்தில் விவசாய நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி, அங்கு கால்வாய் ஒன்றையும் வெட்டியதாக வரலாறுகள் கூறுகின்றன.

பஸ்ஹான் நவாஸ்

வீடியோ லிங்க் https://youtu.be/hRGNYdrE4h8

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.