அம்பாறை, மஹாஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (14) மாலை 5.40 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் குறித்த பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மஹாஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.