கொழும்பு 05, நாரஹேன்பிட்ட, தாபரே மாவத்தையில் கொரோனா தொற்றாளர்கள் இருவர் நேற்று மாலை (27) அடையாளம் காணப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி குறித்த பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்றைய தினத்தில் மாத்திரம் 60 க்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் அவர்களில் பெரும்பாலானோர் கடற்படை உறுப்பினர்கள் எனவும் அவர் மேலும் கூறினார்.

மேலும் நாரஹேன்பிட்ட, தாபரே மாவத்தையில் கொரோனா தொற்றாளர்கள் இருவரும் டொரின்டன் அறுபதாம் இலக்க தோட்டத்தில் கொழும்பு மாநகர சபை ஊழியர் ஒருவரும் நேற்று கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கொழும்பு மாநகர சபையில் பணிபுரியும் ஊழியர் பணியாற்றும் வாகன சாரதி கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையில் வசிப்பவர் என கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.