நவீன மருத்துவத்துறையின் தந்தை அலி இப்னு ஸீனா மேற்குலகில் அவிஸினா என்று அழைக்கப்படுகிறார். அன்றைய பரந்த பாரசீகத்தில் (இன்றைய உஸ்பெகிஸ்தானில்) கி.பி 980,ம் ஆண்டில் பிறந்த இவர் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார். நுண்ணுயிர்களால் ஏற்படும் நோய்களினால் அன்றைய மக்கள் பாரிய பிரச்சினைகளை எதிர் கொண்டார்கள்.
மனிதனில் இருந்து மனிதனுக்கு நுண்ணுயிர் அல்லது வைரஸ்கள் பரவுவதைத் தடுப்பதற்காக, குறித்த நோய் தொற்றுக்குள்ளானவரை ஒரு மாதமும் பத்து நாட்களும் (நாற்பது நாட்கள்) தனிமைப்படுத்தி வைக்கும் புதிய முறையை அலி இப்னு ஸீனா அறிமுகம் செய்தார்
இந்த முறை அர்பஈய்ன் என்று அழைக்கப்பட்டது. أربعين என்ற அரபுச் சொல் நாற்பது என்பதைக் குறிக்கும். அரேபியா மற்றும் பாரசீகத்துடன் வர்த்தகத் தொடர்புகளைப் பேணிவந்த "வெனிஸ்" நகர வர்த்தகர்கள் இத்தாலியில் இந்த முறையை முதலில் அறிமுகம் செய்தார்கள். இத்தாலியின் வெனிஸ் நகரம் அன்றை ஐரோப்பாவின் வர்த்தகத் தலைநகராக விளங்கியது.
அர்பஈய்ன் என்ற அரபுச் சொல்லுக்கு அதாவது நாற்பது என்பதற்கு quaranta (குஆரன்டா) என்று அர்த்தமாகும். இதனைத் தழுவியே quarantine தனிமைப்படுத்தல் என்ற சொல் உருவானது. கொரோனாவைக் கட்டுப்படுத்த போராடாடும் இன்றைய மருத்துவ உலகின் தவிர்க்க முடியாத சொல் quarantine ஆகும். படம் இப்னு ஸீனா மற்றும் அவர் எழுதிய மருத்துவ நூலானா கானூன் அல் திப்
தமிழில் : பஸ்ஹான் நவாஸ்
Sri Lanka Broadcasting corporation