சீரற்ற காலநிலையினால் 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் விடுத்துள்ளது.
இந்த மாவட்டங்களில் கடந்த 24 மணித்தியாள காலப்பகுதியில் 100 100 மில்லிமீட்டருக்கும் மேற்பட்ட மழைவிழ்ந்நி பதிவாகியிருப்பதாகவும் அவர்கூறினார்.
தற்போதைய சீரற்ற காலநிலையினால் ஏற்படக்கூடிய அனர்த்த நிலை தொடர்பான தகவல்களை அறிந்து கொள்வதற்கு 117 என்ற இடர் முகாமைத்துவ தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, மாத்தறை, காலி, மாத்தளை, குருணாகலை, கொழும்பு மற்றும் கண்டி உள்ளிட்ட மாவட்டங்களுக்கே மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் ஜானக்க ஹன்துன்பதிராஜா தெரிவித்தள்ளார்.

கொழும்பு மாவட்டத்தின் சீதாவாக்க பிரதேச செயலாளர் பிரிவுக்கும், கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, யட்டியாந்தோட்ட மற்றும் தெரணியகலை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இவ்வாறு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாத்தறை மாவட்டத்தின், பிட்டபெத்தர மற்றும் கொடபொல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுக்கும் இரத்தினபுரி மாவட்டத்தின், எகலியகொட, குருவிட்ட, கிரியெல்ல, அயகம, கலவான, நிவித்திகல, எலபத்த, இரத்தினபுரி மற்றும் பெல்மடுல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.