(செய்தி ஆசிரியர் ரிஹ்மி ஹக்கீம்)

2019 க.பொ.த. சாதாரண தர பரீட்சைகளின் பெறுபேறுகள் தற்போது வெளியாகியிருக்கின்ற சூழ்நிலையில், மதிப்பீட்டு பணிகளில் ஈடுபட்ட ஆசிரியர்கள் பலருக்கான கொடுப்பனவுகள் இதுவரை வழங்கப்படவில்லை என்று இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளரும், முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினருமான மஹிந்த ஜயசிங்க தெரிவிக்கையில், பரீட்சை மதிப்பீட்டு பணிகளில் ஈடுபட்ட ஆசிரியர்கள் பல பேருக்கு கிடைக்க வேண்டிய கொடுப்பனவு வங்கிகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக மார்ச் 03 அன்று அவர்களுக்கு குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்) கிடைத்துள்ள போதும் அவர்களது வங்கிக் கணக்கில் வைப்பாகி இருக்கவில்லை.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் பரீட்சைகள் திணைக்களத்தில் வினவிய போது, குறித்த கொடுப்பனவை வழங்குவதற்கான போதிய நிதி அவர்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் அனைவரும் விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கு தம்முடைய சொந்த பணத்தையே தேவைகளின் போது பயன்படுத்தியுள்ளனர். இதனால் அவர்கள் பல சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். எனவே இது குறித்து கவனம் செலுத்தி உரிய தீர்வை பெற்றுத்தருமாறு கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க மேலும் தெரிவித்தார். 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.