2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது தேர்தல் சட்டங்கள் மீறப்பட்டமை தொடர்பில் அனுப்பப்பட்ட முறைப்பாடுகளுக்கு, தேர்தல் ஆணையகம் இதுவரை பதில் அளிக்கவில்லை என தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தின் (CMEV) தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுள கஜநாயக அவர்கள் தெரிவித்துள்ளார். 

அரசியல் கட்சிகளுக்கு எதிராக, அபேட்சகர்களுக்கு எதிராக மற்றும் ஒரு சில அரச ஊழியர்கள் மற்றும் அரச பொது பணிப்பாளர்களுக்கு எதிராக, குறிப்பாக அப்போதிருந்த சமுர்த்தி அத்தியட்சகர் உட்பட அரச அதிகாரிகள் பலர் பற்றி நாங்கள் முறைப்பாடுகளை அளித்திருந்தோம். எனினும் இதுவரை எமக்கு தேர்தல் ஆணையகம் அந்த முறைப்பாடுகளுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் பற்றி எதுவுமே அறியத்தரவில்லை. 

அத்துடன் தற்போதைய சமுர்த்தி அத்தியட்ட்சகரின் செயல்பாடுகள் உட்பட பல்வேறுபட்ட தேர்தல் சட்ட மீறல்கள் பற்றி நாங்கள் தேர்தல் ஆணையகத்துக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளோம். என்ற போதிலும் அவ்வாறான முறைப்பாடுகள் தமக்கு கிடைத்துள்ளது, என்று கூட எமக்கு இதுவரை அவர்கள் எவ்வித பதில்களையும் அளிக்கவில்லை என்று மஞ்சுள கஜநாயக மேலும் தெரிவித்தார்.

(தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.