எம்.எம்.அஹமட் அனாம்

கொவிட் 19 நோயால் பாதிக்கபட்டு மரணிக்கின்ற முஸ்லிம் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யக் கோரி, மட்டக்களப்பு மாவட்டத்தில் 50,000 கையொப்பங்களைத் திரட்டும் நடவடிக்கையை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் சட்டத்தரணி ஹபீப் றிபான் ஆரம்பித்துள்ளார்.
முஸ்லிம் ஜனாஸா நல்லடக்கம் செய்யபடவேண்டியதன் முக்கியத்துவத்தை தெளிவுபடுத்தும் நோக்கில், இவ்வாறு கையெழுத்துகளை பெற்று, அரசாங்கத்திடம் வேண்டுகோள் ஒன்றை முன்வைக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
குறித்த வேலைத்திட்டம், அம்பாறை மாவட்டத்தில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவத்தால்  முன்னெடுக்கபட்டு, வெற்றிகரமாக நடைமுறைபடுத்தபட்டுவருகின்றது.
இதற்கு வலுசேர்க்கும் வகையில், நாளை (18)  மட்டக்களப்பு மாவட்டம் பூராகவும் கையெழுத்துக்களை எடுப்பதற்கான முன்னெடுப்புகள் மேற்கொண்டுள்ப்பட்டுள்ளன. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.