கொரோனா தொற்றின் பின்னணியில், சிறுபான்மையின முஸ்லிம் சமூகம் குறித்து, வெறுக்கத்தக்கப் பேச்சுகள் நாடளாவிய ரீதியில் வெளியிடப்பட்டு வருவதாகவும் பகிரங்கமாக கருத்துகள் வெளியிடப்பட்டு வருவதாகவும், மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) (13) தெரிவித்துள்ளது.
முஸ்லிம் சமூகத்தாலேயே, வேண்டுமென்றே இந்தத் தொற்று நோய் பரப்பப்படுவதாகவும் இதனால், முஸ்லிம்களின் வர்த்தகங்களை புறக்கணிக்க வேண்டும் என்றும் பல கருத்துகள் தெரிவிக்கப்படுவதாக, நியூயோர்க்கைத் தளமாகக் கொண்ட குழுவொன்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம், இந்தப் பகிரங்கக் கருத்துகள் குறித்து, இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று, ஏப்ரல் 12ஆம் திகதியன்று, முஸ்லிம் சமூகத்தால் அரசாங்கத்துக்குக் கடிதமொன்றை எழுதியிருந்ததைச் சுட்டிக்காட்டியிருந்தது.  
“கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் சடலங்கள் தகனம் செய்யப்படல் வேண்டும் என, கடந்த மார்ச் மாதம் 17ஆம் திகதி, அரசாங்கம் விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது. எனினும், இது இஸ்லாமிய கலாசாரத்துக்கு எதிரானதாகும்.
“இந்நிலையில், கொவிட்-19ஐ ஒரு காரணமாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் இனவாதப் பேச்சுகளையும் வன்முறைகளையும் தடுப்பதற்கு, அரசாங்கம் உடனடியாக நடடிக்கை எடுக்கவேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சில சந்தர்ப்பங்களில், அரசாங்கத் தலைவர்களும் மூத்த அதிகாரிகளம், சீன விரோத சொற்களைப் பயன்படுத்தி, வெறுக்கத்தக்க, இனவெறிப் பேச்சுகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ ஊக்குவித்துள்ளனர் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
(தமிழ்வின்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.