கட்டுநாயக்க விமான நிலையத்தை ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதிக்கு முன்னர் திறப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியிருப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.


விமான நிலையத்தை சுற்றுலா பயணிகளுக்காக திறப்பதற்கு முன்னர் நாட்டிற்கு வருவதற்கு எதிர்பார்த்துள்ள அனைவரும் அழைத்து வரப்படுவர் என்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டின் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் நிலவும் இடவசதிக்கு ஏற்ப இது தீர்மானிக்கப்படும் என்றும் அவர் கூறினார். சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையம் திறக்கப்பட்ட பின்னர் நாட்டுக்கு குழுக்களாக சுற்றுலா பயணிகளை அழைத்து வருவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

இருப்பினும் வருகை தரும் அனைத்து சுற்றுலா பயணிகளும் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருவதற்கு முன்னர் அந்தந்த நாடுகளில் PCR பரிசோதனை மேற்கொண்ட அறிக்கை ஒன்றை எடுத்து வர வேண்டும். அதன் அடிப்படையில் அவர்களுக்கு நாட்டிற்குள் சுற்றுலா பயணங்களை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்படும்.

இருப்பினும் இவர்கள் தொடர்பாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தனியாக கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களம் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.