ஒரே இரவில் தாம் இரண்டாயிரம் முதல் மூவாயிரம் வரையிலான இராணுவ வீரர்களை கொன்றொழித்துள்ளதாக முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

ஆனையிறவு பகுதியில் வைத்து ஒரே இரவில் இவ்வாறு இராணுவப் படைவீரர்களை கொன்றொழித்ததாகத் தெரிவித்துள்ளார்.

தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றிற்கு வருமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச விடுத்த கோரிக்கையை தாம் நிராகரித்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்.

கருணா அம்மான் கொரோனா வைரஸ் தொற்றை விடவும் அபாயமானவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசியப் பட்டியல் ஊடாக தெரிவாவதனை விடவும் தாம் மக்களின் ஆணையின் அடிப்படையில் பாராளுமன்றம் செல்லவே விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.