இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 21 பேர் நேற்றைய தினம் (07) பதிவாகியுள்ளனரென, சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1835 ஆக அதிகரித்துள்ளது. 
நேற்று பதிவானோரில் 16 பேர் குவைட்டிலிருந்து நாடு திரும்பியவர்கள் என்று தெரியவருகிறது.
மேலும் இருவர் கட்டாரிலிருந்து நாடு திரும்பியவர்கள் என்பதுடன், ஒருவர் பங்களாதேஷில் இருந்து நாடு திரும்பியவர் எனவும்  மற்றைய இருவர் பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.