இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கான மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் ஒன்லைன் முறையில் ஏற்கப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி பிரதான பரீட்சை உத்தியோகத்தர், மேலதிக உத்தியோகத்தர்கள், உதவிப் பரீட்சை உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கான விண்ணப்பங்களை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பூர்த்தி செய்து அனுப்ப முடியும். இதன் முகவரி www.doenets.lk ஆகும்.
இந்த நடைமுறையை தொடர்ந்து, விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்து, அச்சிடப்பட்ட பத்திரத்தின் எஞ்சிய பகுதியை பூர்த்தி செய்து நிறுவன தலைவர் ஊடாக அடுத்த மாதம் பத்தாம் திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியவாறு பரீட்சைகள் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கவேண்டும். மேலதிக விபரங்களை தொலைபேசி இலக்கத்தினூடாக பெற்றுக்கொள்ள முடியும்.
இது தொடர்பில் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள் வருமாறு 1911, 0112-785-231

அரசாங்க தகவல் திணைக்களம் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.