இ.போ.ச. பஸ் வண்டிகளிலும் தனியார் பஸ் வண்டிகளிலும் பயணிக்கும்  பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு வசதியாக, கையடக்க தொலைபேசி செயலியை (app)  தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அடுத்த வாரம் அறிமுகப்படுத்தவுள்ளது.
பஸ் வண்டிகளில் பயணிக்கும்போது தாம் எதிர்நோக்கும் துன்புறுத்தல்கள், பஸ் வண்டிகளின் வேகம் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் கையடக்க தொலைபேசி செயலியை பயன்படுத்தி பொதுமக்கள் முறையிட முடியும் என, போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
அத்துடன், தாம் பயணிக்கும் பஸ்ஸின் நேரத்தை அறிய முடிவதுடன், அதிக நேரம் தரித்து நிற்கும் பஸ்களை தவிர்க்கவும் முடியும் எனவும், அவர் தெரிவித்தார்.
பஸ்ஸின் உடனுக்குடனான நேர அட்டவணைகள் மற்றும் பஸ் தற்போது எங்கு உள்ளது போன்ற தகவல்களை பயணிகளால் உடனுக்குடன் பெற முடியும். இது பொதுமக்களுக்கான போக்குவரத்து சேவையை நெறிப்படுத்த வழிவகுக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தினகரன் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.