பொத்துவில் முகுது மகா விகாரை என்று கூறப்படும் மண்மலையில் அமைந்துள்ள விகாரை மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசங்கள் தொல்பொருள் மையமாக கூறப்பட்ட போதிலும் - இன்னும் அதன் பரப்பு மற்றும் அமைவிடம் தொடர்பான நில அளவை குறிப்புக்கள் பூரணப்படுத்தப்பட்டு - வர்த்தமானியில் பிரசுரிக்கப்படவில்லை.
(ஆதாரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது)


இந்நிலையில் முகுது மகா விகாரையை சுற்றியுள்ள 70 ஏக்கர் காணிகளை மக்களின் விருப்பத்திற்கு மாற்றமாக பறிக்க முனைவது - இனரீதியிலான பாகுபாட்டையே காட்டுகிறது.

30 ஏக்கர் காணியை வழங்குவதற்கு உடன்பாடு காணப்பட்ட நிலையில் - 70 ஏக்கர் காணிதான் வேண்டுமென ஒற்றைக்காலில் நிற்பதும் - நூற்றுக்கணக்கான முஸ்லிம் குடும்பங்களை வெளியேற்ற முனைவதும் - ஒரு இனமுறுகலை ஏற்படுத்த முனைவதாகவே அமைந்துள்ளது.

முகுது மகா விகாரை விவகாரத்தை ஒரு இனமுறுகலாக்கி - அதனை நாட்டுபுற சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு சென்று - முஸ்லிம்களை சிங்கள பௌத்த தேசத்திற்கு எதிரானவர்களாக காட்டி - வாக்குகளை வேட்டையாடும் யுக்தியாக பயன்படுத்துவதற்காகவே - தேர்தல் காலத்தில் இவ்விடயம் கையிலெடுக்கப்பட்டுள்ளது என்பது வெளிப்படையான இரகசியம்.

அதற்காகவே, இன்று (18/06) பொத்துவில் முகுது மகா விகாரை பிரதேசத்தை நில அளவை செய்யவும் - அடையாளமிடவுமென அதிகாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளதும் - இயல்புநிலை குழப்பப்பட்டதுமான நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், முகுது மகா விகாரையை சூழவுள்ள பிரதேசங்கள் தொல்பொருள் மையமாக கூறப்பட்ட போதிலும் - இன்னும் அதன் பரப்பு மற்றும் அமைவிடம் தொடர்பான நில அளவை குறிப்புக்கள் பூரணப்படுத்தப்பட்டு - இன்னும் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படாத நிலையில் - அவர்கள் விரும்பிய வண்ணம் எல்லையிடுவதற்கும் - நிலங்களை காவுகொள்வதற்கும் இடமளிக்க முடியாது. அதில், பொத்துவில் சமூகம் ஒருமித்த கருத்தில் செயற்படுகிறது.

அவர்களுடனான ஒருமைப்பாட்டை அனைவரும் வெளிப்படுத்தி நிற்போம்.

 - ஏ.எல். தவம் -
Blogger இயக்குவது.