தூர சேவை பஸ் ஊழியர்களுக்காக ஓய்வு அறையை நிர்மாணிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

தொடர்ந்து சேவையில் ஈடுபடும் பஸ் சாரதிகளும் நடத்துனர்களும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதை தடுப்பதை நோக்காகக் கொண்டு கொழும்பு பெஸ்டியன் மாவத்தை பஸ் நிலையத்தில் இவ் ஓய்வு அறை நிர்மாணிக்கவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரண்டா குறிப்பிட்டுள்ளார்.

தூர சேவைகளில் ஈடுபடும் சாரதிகள் உரிய முறையில் ஓய்வெடுக்காமையால் விபத்துகள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகமாகவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தற்போது அவர்களின் ஓய்வு நேரத்தை கழிப்பதற்கு உரிய இடம் இல்லை இதன் காரணமாக தேவையான வசதிகளுடன் கூடிய ஓய்வு அறைகளை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.