கம்பஹா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், இன்று (18) நீர் விநியோகம் துண்டிக்கப்படுமென, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இன்று (18) காலை 9.00 மணி தொடக்கம் இரவு 9.00 மணிவரையான 12 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.
வெலிசர, மஹாபாகே, கந்தானை, நாகொடை, கெரவலப்பிட்டிய, மாட்டாகொட, திக்ஹோவிட்ட, போபிட்டிய, பமுனுகம உள்ளிட்ட பகுதிகளில் நீர் விநியோகம் துண்டிக்கப்படுமென, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. 
அவசர திருத்தப் பணிகள் காரணமாக, இவ்வாறு நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக, தேசிய நீர்வழங்கல் சபை தெரிவித்துள்ளது.  

தமிழ் மிரர் 
Blogger இயக்குவது.