திருகோணமலை மாவட்டத்தில்  ஐக்கிய தேசிய கட்சியின் நிலைகண்டு  ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் என்றவகையில் கவலையடைகின்றேன். - ஏ எல் எம் நவ்பர், பிரதேச சபை உறுப்பினர்(ஐ தே க) திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை 

2020 பொதுத்தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் அறிமுகமும் ஐக்கிய தேசிய கட்சியின் திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடனான  கலந்துரையாடலும் இன்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சேருவில தொகுதியின் ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளருமான சந்திப்  சமரசிங்க அவர்களின் தலைமையில் திருகோணமலையில்   நடைபெற்றது.

கட்சியின் அழைப்பை ஏற்று நானும் அதில்  கலந்து கொண்டேன்..

அந்தக் கூடடத்தில் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதம மந்திரியுமான  கௌரவ ரணில் விக்ரம சிங்க அவர்களின் பிரத்தியோக செயலாளர் சுதத் சந்தசேன, மாவட்ட முகாமையாளர் குருகே, கௌரவ முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் சாந்த, மற்றும் வேட்பாளர்களும் கலந்துகொண்டனர். அந்தக்கூட்டத்தில் அவர்களிடம் உண்மையான ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் அவர்களது பிரதிநிதிகளான எங்களிடம் கேட்கும் பல கேள்விகளை முன்வைத்தேன்..
அவற்றுள் முக்கியமானவை,

* பொதுத் தேர்தலுக்கு வேட்பாளர் பட்டியல் போடும் பொழுது கட்சி முக்கியஸ்தர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள்  அனைவருடைய ஆலோசனைகளும் ஏன் பெறப்படவில்லை?
எம்மிடம் எந்த ஆலோசனையும் பெறாமல் போடப்பட்டுள்ள இந்த வேட்பாளர்களுள் ஓரிருவர் தவிர எவருக்கும் வாக்கு வங்கிகள் இல்லை. வாக்குகளைப்பெறும் வழிகளும் அவர்களிடம்  இல்லை. இத்தகையவர்களை நாம் எப்படி வெல்ல வைப்பது?

*திருகோணமலையில் ஆசனம் ஒன்று பெற எந்த கட்சியாக இருந்தாலும் ஆகக்குறைந்தது 35000  வாக்குகளாவது எடுக்கவேண்டும். போடப்பட்ட 7 வேட்பாளரும் எவ்வாறு  எடுப்பீர்கள் என்று விளக்க முடியுமா?

*திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடவே நீங்கள் வந்தீர்கள். இங்கு வெல்ல முடியும் என்றால் ஏன் மீண்டும் உங்களுடைய சொந்த மாவட்டத்தில் போட்டியிடுகிறீர்கள்? என்பது என்னால் இன்று கௌரவ சந்திப் சமரசிங்க அவர்களிடம்  கேட்கப்பட்ட கேள்வி

இன்று கட்சிக்குள் வந்தவர்கள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் உறுப்புரிமையினை நீக்குவோம் 
என்று சொல்வதற்கோ எச்சரிப்பதற்கோ தகுதி அற்றவர்கள்... முடிந்தால் அதனை செய்துகாட்டுங்கள்? இவ்வாறான அதிகாரம் வேட்பாளர்களுக்கு வழங்கிவர்கள் யார்?

இது போன்ற பல கேள்விகளுக்கும் அவர்கள் தந்த பதில்
"ஐக்கிய தேசிய கட்சியினை கட்டியெழுப்புவோம்" என்பதே.

அவர்களின் பதில்கள் கட்சி மற்றும் தலைமை குறித்து சிந்திக்க வைத்துள்ளது.

இந்த நிலையில் எம்மை தெரிவு செய்த எமது வாக்காளப்பெருமக்களிடம் முக்கியமான கேள்வியொன்றை முன்வைக்கின்றேன்.

பரம்பரை பரம்பரையாக ஐக்கிய தேசிய கட்சினை ஆதரித்து வந்த நாம் தற்பொழுது தலைவர் கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்களுடன் பயணிப்பதா?

அல்லது ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச உருவாக்கிய ஐக்கிய மக்கள் சக்தியுடன் பணிப்பதா? என்பதே எனது கேள்வி.

உங்களுடைய ஆலோசனைகளையும் கருத்துக்களையும் எதிர்பார்க்கின்றேன். உங்கள் முடிவோடுதான் எமது அரசியல் பயணம் தொடரும். 

மக்களின் தீர்மானமே எமது முடிவு.

என்றும் உங்கள் பிரதேச சபை உறுப்பினர்

Mohamed_Nowfar Dillu





கருத்துரையிடுக

Blogger இயக்குவது.