பொதுத்தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடைபெறும் திகதிகளை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி ஜூலை மாதம் 14, 15, 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும் என அறிவித்துள்ளது.

மேற்படி தினங்களில் வாக்களிக்க முடியாதவர்கள் ஜூலை மாதம் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் வாக்குகளை அளிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Blogger இயக்குவது.