கம்பஹா மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட வாக்காளர்களைக் கொண்டு, இன்று (13) தேர்தல் ஒத்திகை நடைபெறவுள்ளது.

சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி பாராளுமன்றத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் தெளிவூட்டும் வகையில் குறித்த தேர்தல் ஒத்திகை இடம்பெறவுள்ளது.

நீர்கொழும்பு செபஸ்டியார் வித்தியாலயத்தில், இன்று (13) காலை 10.00 மணி தொடக்கம் 12.30 மணிவரை, தேர்தல் ஒத்திகை நடைபெறுமென, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிகழ்வில், சுகாதாரத்துறை அதிகாரிகள், நீர்கொழும்பு பிரதேச செயலக அதிகாரிகள், பொலிஸார், கம்பஹா மாவட்டத் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி, மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் ஜயலத் உள்ளிட்ட பலர் பங்கேற்கவுள்ளனர்.
தேர்தல் ஒத்திகையில் சுமார் 200 வாக்காளர்கள் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கடந்த வாரம் அம்பலாங்கொடையில் நடத்தப்பட்ட தேர்தல் ஒத்திகையில் தோல்வியே அதிகம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

(வீரகேசரி)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.